ஏ.ஆர்.ரஹ்மானை கொண்டாடும் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகம்: காரணம் இதுதான்!

  • IndiaGlitz, [Tuesday,January 05 2021]

கடந்த சில ஆண்டுகளாக திரையுலக பிரமுகர்களின் பிறந்த நாள் வரும்போது காமன் டிபி போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாவதும் அந்த போஸ்டர்களை பிரபலங்கள் வெளியிடுவதும் வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் நாளை அதாவது ஜனவரி 6ஆம் தேதி ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனை அடுத்து அவருடைய காமன் டிபி போஸ்டரை ஒட்டுமொத்த திரையுலக பிரமுகர்கள் தங்களது சமூக வலைதளத்தில் பதிவு செய்துவருகின்றனர்

பாடலாசிரியர் விவேக், இயக்குனர் வெங்கட்பிரபு, இயக்குனர் அஜய் ஞானமுத்து, இயக்குனர் ராஜேஷ், பாடகி ஸ்வேதா மேனன், இசையமைப்பாளர் தர்புகா சிவா, இசையமைப்பாளர் சித்தார்த் விபின், பாடகர் கிரிஷ், இயக்குனர் மோகன் ராஜா உள்பட பலர் தங்களது சமூக வலைதளங்களில் ஏஆர் ரஹ்மான் அவர்களின் பிறந்தநாள் காமன் டிபி போஸ்டரை பதிவு செய்து வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்

‘நான் இந்த உயரத்தில் இருக்க என்னுடைய அம்மாவே காரணம்’ என்று பதிவு செய்யப்பட்டுள்ள அந்த அட்டகாசமான காமன் டிபி போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாளை பிறந்தநாள் கொண்டாட இருக்கும் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்களுக்கு நமது உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்