PS2 பின்னணி இசைப்பணிகள் எந்த நாட்டில் தெரியுமா? ஏஆர் ரஹ்மான் வெளியிட்ட சூப்பர் ஸ்டில்ஸ்..!

  • IndiaGlitz, [Tuesday,March 21 2023]

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது என்பதும் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் 500 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் இந்த படத்தை பார்த்த அனைவருமே இரண்டாம் பாகத்தையும் கண்டிப்பாக பார்ப்பார்கள் என்பதால் இரண்டாம் பாகமும் 500 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இந்த படத்தில் இடம்பெற்ற ’அகம் நக’ என்ற பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் சமூக வலைதளங்களில் இந்த பாடல் டிரெண்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் பின்னணி இசை பணிகளை லண்டனில் உள்ள அபெய்ரோடு ஸ்டுடியோவில் நடைபெற்று வருவதாக இசைப்புயல் ஏஆர் ரகுமான் அறிவித்துள்ளார். அவர் இயக்குனர் மணிரத்னத்துடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன. இந்த படத்தின் பின்னணி இசைப்பணிகள் இன்னும் ஒரு சில நாட்களில் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

More News

என்.டி.ஆர் பாலகிருஷ்ணாவின் அடுத்த படத்தில் அஜித், விஜய் பட நடிகை.. அதிரடி அறிவிப்பு..!

கடந்த 40 ஆண்டுகளாக தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகராக இருந்து வரும் என்டிஆர் பாலகிருஷ்ணா நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் அஜித், விஜய் ஜோடியாக நடித்த நடிகை நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக

தமிழில் ஷாருக்கானின் 'பதான்': ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

ஷாருக்கான் நடித்த 'பதான்' திரைப்படம் கடந்த ஜனவரி 25ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

சிம்புவின் 'பத்து தல' படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?

சிம்பு நடித்த 'பத்து தல' என்ற திரைப்படம் வரும் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதை பார்த்து வருகிறோம்

அஜித்-ஷாலினியின் லேட்டஸ்ட் ரொமான்ஸ் புகைப்படங்கள்.. குவியும் லைக்ஸ்..!

நடிகர் அஜித் தற்போது தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றுள்ள நிலையில் இந்த சுற்றுப்பயணம் குறித்த புகைப்படங்களை ஷாலினி அஜித் தனது இன்ஸ்டாகிராம்

'குற்றப்பரம்பரை' படத்தில் விஜய்காந்த் மகன்? இயக்குனர் யார் தெரியுமா?

பிரபல நடிகர் மற்றும் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி எழுதிய 'குற்றப்பரம்பரை' என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு திரைப்படம் தயாரிக்க பலர் முயற்சி செய்தனர் என்பது தெரிந்ததே.