ஏ.ஆர்.ரகுமானின் வித்தியாசமான தேர்தல் பிரச்சாரம்.. இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் நாளை பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது. இந்த நிலையில் தேர்தலில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வை சமூக ஆர்வலர்கள் ஏற்படுத்தி வரும் நிலையில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவர்களும் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
வாக்களிக்கும் உரிமை என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் மிகவும் முக்கியமான கடமைகளில் ஒன்றாகும். 2024 பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்ற இளைஞர்கள் கண்டிப்பாக வாக்களித்து சாதனை படைக்க வேண்டும்.
அனைத்து மக்களும் குறிப்பாக இளைஞர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை பெற்று உலகம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவை கொண்டாடும் பணியில் இணையுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
வாக்களிக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தில் என்னால் முடிந்ததை நான் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். முதன் முதலாக வாக்கு செலுத்துபவர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன், அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்று ஏ.ஆர்.ரகுமான் பதிவு செய்துள்ளார்.
ஏஆர் ரகுமானின் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
The right to vote is one of the most important duties of being a citizen! This 2024 Lok Sabha election will see a record number of youth that are eligible to vote. Therefore, I urge all people and especially the youth to get their voter ids and join in the process of celebrating… pic.twitter.com/HhJjeOwSVN
— A.R.Rahman (@arrahman) April 18, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com