பிரதமர் மோடியின் டுவீட்டுக்கு பதில் அளித்த ஏ.ஆர்.ரஹ்மான்

பிரதமர் மோடி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து பிரபலங்களுக்கும் ஒரு வேண்டுகோளை விடுத்தார். நாட்டில் வாக்குப்பதிவு சதவிகிதத்தை அதிகரிக்க உதவ வேண்டும் என்றும், அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த வேண்டுகோளை அவர் ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் உள்பட பல அரசியல் தலைவர்களுக்கும், சமூக சேவகர்களுக்கும் திரையுலக பிரபலங்களுக்கும் தனித்தனியாக டுவீட்டுக்களை பதிவு செய்திருந்தார். இந்த டுவீட்டுக்கு பல பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து தங்களால் முடிந்த அளவு வாக்களிப்பதன் அவசியத்தை மக்களுக்கு எடுத்து சொல்வதாக வாக்குறுதி அளித்தனர்.

அந்த வகையில் பிரதமரின் இந்த வேண்டுகோள் டுவிட்டை பெற்றவர்களில் ஒருவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த டுவீட்டுக்கு அவர் பதிலளிக்கையில், 'நிச்சயம் செய்து காட்டுவோம்' நன்றி' என்று பதிலளித்து தேசிய கொடியையும் தனது டுவிட்டில் பதிவு செய்துள்ளார்.