முடிவுக்கு வந்தது 29 ஆண்டுகால திருமண உறவு.. ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ராபானு விவாகரத்து முடிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் - சாய்ரா பானு திருமணம் கடந்த 1995 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில், இருவரும் தற்போது பிரிவதாக அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று இரவு, சாய்ரா பானு தனது கணவரை பிரிவதாக அறிவித்த சில நிமிடங்களில், ஏ.ஆர். ரகுமான் தனது எக்ஸ் பக்கத்தில், “நாங்கள் 30 ஆண்டுகளை நிறைவு செய்வோம் என்று எதிர்பார்த்தோம். எதிர்பாராத முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களால் நடுங்கும். உடைந்தவை உடைந்ததுதான், மீண்டும் ஒன்று சேர வாய்ப்பு இல்லை. இந்த இக்கட்டான சமயத்தில் எங்கள் தனி உரிமையை மதிப்பதற்கு நன்றி,” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 1995 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஏ.ஆர். ரகுமான், சாய்ரா பானு திருமணம் நடைபெற்ற நிலையில் இந்த தம்பதிக்கு கதீஜா, ரஹீமா என்ற இரண்டு மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர்.
“We had hoped to reach the grand thirty, but all things, it seems, carry an unseen end. Even the throne of God might tremble at the weight of broken hearts. Yet, in this shattering, we seek meaning, though the pieces may not find their place again. To our friends, thank you for…
— A.R.Rahman (@arrahman) November 19, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments