'லால் சலாம்' பணியை தொடங்கிய ஏ.ஆர்.ரஹ்மான், அருகில் ஐஸ்வர்யா.. செம வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருக்கும் ’லால் சலாம்’ என்ற படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசை அமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது படத்திற்கான பாடல் கம்போஸிங் பணியில் ஏஆர் ரகுமான் இருப்பதாக தெரிகிறது
மும்பையில் ஏஆர் ரகுமான் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் இணைந்து பாடல் கம்போஸிங் செய்யும் பணியில் இருக்கும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில் பிரவீன் பாஸ்கர் படத்தொகுப்பில் ராமு தங்கராஜ் கலை இயக்கத்தில் பூர்ணிமா ராமசாமி ஆடை வடிவமைப்பில் உருவாகும் இந்த படம் 2023 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
#IsaiPuyal #ARRahman & #AishwaryaRajinikanth are all smiles during a jamming session for #LalSalaam in Mumbai! ????????
— meenakshisundaram (@meenakshinews) November 25, 2022
An @ash_rajinikanth Directional ??
An @arrahman Musical ??#Superstar @rajinikanth @LycaProductions@TheVishnuVishal @vikranth_offl pic.twitter.com/x58qtRuiyH
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments