'பாகுபலி' போன்ற திரைப்படம் எடுக்க முடியுமா? ஏ.ஆர்.ரஹ்மானின் பதில்

  • IndiaGlitz, [Monday,May 08 2017]

கடந்த பத்து நாட்களாக எங்கு பார்த்தாலும் 'பாகுபலி' படத்தை குறித்த பேச்சாகவே நாடு முழுவதும் இருந்து வருகிறது. ரூ.1000 கோடி வசூல் செய்த இந்திய படம், குறிப்பாக தென்னிந்திய படம் என்பது நாம் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாட வேண்டிய ஒரு விஷயம். பொதுமக்கள், ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட் திரையுலகினர்களும் எந்தவித ஈகோவும் இல்லாமல் எஸ்.எஸ்.ராஜமெளலி உள்பட பாகுபலி படக்குழுவினர்களுக்கு தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆஸ்கார் நாயகனும் இயக்குனருமான ஏ.ஆர்.ரஹ்மான், 'பாகுபலி 2' படம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, ''பாகுபலி போன்றொரு பிரம்மாண்ட திரைப்படத்தை உருவாக்க, நம்மிடம் இயக்குநர்கள் இருக்கிறார்கள். அவர்களே அதைச் செய்யட்டும். கூடுதலாக, என்னிடம் 200 கோடி ரூபாய் இல்லை. நான் இசையை, அழகை, காட்சிகளை உருவாக்க விரும்புகிறேன். மக்கள் வெளிவர விரும்பாத அளவுக்கான ஒரு உலகத்தை நான் உருவாக்க விரும்புகிறேன். கதையில் வரும் எதிர்மறை காட்சிகளைக்கூட கவித்துவமாகவே நான் எடுத்துரைக்க விரும்புகிறேன்'' என்று கூறியுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது 'Le Mast' என்ற இசை சம்பந்தப்பட்ட திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படம் விரைவில் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.