சிபாரிசின் பேரில் தேசிய விருதுகள். ஏ.ஆர்.முருகதாஸ் ஆதங்கம்
- IndiaGlitz, [Saturday,April 08 2017]
64வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் விருதுக்கு தேர்வு பெற்ற ஒருசிலர் பாரபட்சமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக அமீர்கான் நடித்த 'டங்கல்' படத்திற்கு விருது கிடைக்காதது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு பதிலளித்துள்ள தேர்வுக்குழு தலைவர் இயக்குனர் பிரியதர்ஷன், அமீர்கானின் 'டங்கல்' படம் பல பிரிவுகளுக்கு கடும் போட்டியை கொடுத்ததாகவும், ஆனால் கடைசியில் நடுவர்களின் முடிவுகளால் அந்த படத்திற்கு விருது கிடைக்கவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில் பிரபல இயக்குனர் ஏ.ஆர்.,முருகதாஸ் அவர்களும் தேசிய விருதுகள் தேர்வில் தேர்வுக்குழு பாரபட்சமாக செயல்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார். சிபாரிசின் பேரில் தேர்வுக்குழு நடுவர்கள் தேசிய விருது அறிவித்துள்ளதாக ஏ.ஆர்.முருகதாஸ் தனது சமூக வலைத்தளத்தில் கூறிய குற்றச்சாட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.