படப்பிடிப்பு தொடங்கிய மறுநாளே சூப்பர் ஸ்டில் வெளியிட்ட ஏஆர் முருகதாஸ்.. 'சிக்கந்தர்' அப்டேட்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடிப்பில் உருவாகும் ‘சிக்கந்தர்’ படத்தின் அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில் நேற்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இன்று இயக்குனர் ஏஆர் முருகதாஸ் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படம் குறித்த ஸ்டில் ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த ஸ்டில் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இயக்குனர் ஏஆர் முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’எஸ்கே 23’ என்ற படத்தை இயக்கி வரும் நிலையில் அவர் நேற்று முதல் ‘சிக்கந்தர்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். முதல் கட்ட படப்பிடிப்பில் அதிரடி ஆக்சன் காட்சிகள் குறிப்பாக பிளைட் ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் முதல் நாள் படப்பிடிப்பு முடிந்த பிறகு அந்த படத்தின் காட்சிகளை ஏஆர் முருகதாஸ், சல்மான் கான் மற்றும் தயாரிப்பாளர் சாஜித் நடிவாலா ஆகிய மூவரும் லேப்டாப்பில் பார்க்கும் காட்சிகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சல்மான்கான் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இந்த படத்தில் சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் என்ற நிலையில் தற்போது இந்த படத்தில் பகத் பாசில் இணைய இருப்பதாகவும் அவர் இணைவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
2025 ஆம் ஆண்டு ரம்ஜான் தினத்தில் இந்த படம் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பு முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது.
🔥🎬 A glimpse straight from the sets of Sikandar 🤩 Excited to be here with you @BeingSalmanKhan sir! Looking forward to great times ahead #SajidNadiadwala’s #Sikandar #ARMSikandarEid2025@BeingSalmanKhan @iamRashmika @NGEMovies @WardaNadiadwala #SikandarEid2025 pic.twitter.com/2dKwpND8Sh
— A.R.Murugadoss (@ARMurugadoss) June 19, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com