புதுமாப்பிள்ளை மகத்துக்கு ஏ.ஆர்.முருகதாஸ் செய்யும் உதவி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் புகழ் நடிகர் மகத் சமீபத்தில் தனது நீண்ட நாள் காதலியான பிராய்ச்சி தேசாயை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த திருமணத்திற்கு மகத்தின் நெருங்கிய நண்பர் சிம்பு உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது ஒரே நேரத்தில் மூன்று திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவற்றில் ஒன்று ’இவன்தான் உத்தமன்’. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு ’இவன்தான் உத்தமன்’ படத்தின் மகத் கெட்டப் போஸ்டர் வெளியாக உள்ளது. இந்த போஸ்டரை பிரபல இயக்குனர் ஏஆர் முருகதாஸ் அவர்கள் வெளியிட உள்ளார். இன்று மகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த போஸ்டர் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பரதன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் மகத், யாஷிகா ஆனந்த் ஜோடியாக நடித்துள்ளனர். எஸ்.தமன் இசையில் உருவாகியிருக்கும் இந்த படம் ஒரு உண்மைக்கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Super happy for brother. #surprisebirthdaylook #ivanthanuthaman#HappyBirthdayDayMahat#armurugadoss@ARMurugadoss#mahatyashikacombo@mahatofficial
— Hariharan Gajendran (@hariharannaidu) February 17, 2020
@ram_ak2028 @_venky_vj#MagVen Dir @yashikaanand @saraavenkatesh @manobala @makapa_anand@onlynikil
@kavithasachi@saregamasouth pic.twitter.com/ge57NhDikr
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout