ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட 'தர்பார்' வீடியோ: குவியும் லைக்ஸ்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியிருக்கும் திரைப்படம் தர்பார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் இந்த படத்தின் பின்னணி இசை அமைக்கும் பணியில் இசையமைப்பாளர் அனிருத் ஈடுபட்டு வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தது. இந்த செய்தி சற்றுமுன் ஏ ஆர் முருகதாஸ் வெளியிட்ட வீடியோவால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
முருகதாஸ் வெளியிட்ட வீடியோவில் அனிருத் இந்த படத்தின் பின்னணி இசையை அமைத்து கொண்டிருக்கும் போன்றும், அதை அருகிலிருந்து ஏஆர் முருகதாஸ் கவனித்துக் கொண்டிருக்கும் காட்சிகளும் இந்த வீடியோவில் உள்ளது. இந்த வீடியோவிற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது. மேலும் ’தர்பார்’ படத்தின் பின்னணி இசை பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
வரும் ஜனவரி 9 ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளிவர இருக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகிபாபு, தம்பி ராமையா, ஸ்ரீமான், உள்பட பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.
Get ready for an adrenaline rush, @anirudhofficial Rockstar in action!!! #Darbar Background Score happening in full swing... intense scenes getting intensified pic.twitter.com/F6LZBHuHu0
— A.R.Murugadoss (@ARMurugadoss) December 24, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments