ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட 'தர்பார்' வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’தர்பார்’ திரைப்படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சற்று முன்னர் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’தர்பார்’ படத்தில் இடம் பெற்ற ’டம்டம்’ என்ற பாடலின் ஒரு சில காட்சிகளை வீடியோவாக வெளியிட்டு உள்ளார். 45 வினாடிகள் மட்டுமே ஒளிப்பரப்பாகும் இந்த வீடியோவில் ரஜினியின் அட்டகாசமான நடனம் நடனம் மற்றும் நயன்தாராவின் ரொமான்ஸ் ஆட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.
அனிருத் இசையில் விவேக் பாடல் வரிகளில் உருவான இந்த பாடலை நாகேஷ் அஜிஸ் என்பவர் பாடியுள்ளார். பிரமாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பாடல் திரையில் தோன்றும்போது பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகிபாபு, தம்பி ராமையா, ஸ்ரீமான், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் லைகாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.
Here is a glimpse of Dumm Dumm song from #Darbar. Get mesmerised in thalaivar’s energy & dance moves. @rajinikanth #Nayanthara @SunielVShetty @LycaProductions @anirudhofficial @santoshsivan @iYogiBabu @i_nivethathomas @prateikbabbar #Darbar #Dummdummhttps://t.co/y10wtJLaZH
— A.R.Murugadoss (@ARMurugadoss) December 29, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com