close
Choose your channels

மகேஷ்பாபு-முருகதாஸ் படத்தை தயாரிக்கும் 5 பிரபல நிறுவனங்கள்

Monday, June 20, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சோனாக்ஷி சின்ஹா முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'அகிரா' படத்தின் இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணியில் பிசியாக உள்ளார். இந்நிலையில் விரைவில் அவர் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகவுள்ள ஒரு படத்தை இயக்கவுள்ளார்.
இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் மகேஷ்பாபுவின் ஜோடியாக ப்ரணித் சோப்ராவும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கவுள்ளனர். தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது
இந்நிலையில் இந்த படத்தை ஐந்து பிரபல நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.100 கோடி என்றும் இந்த படத்தை ரிலையன்ஸ், லியோ புரொடக்ஷன்ஸ், மகேஷ்பாபுவின் சொந்த நிறுவனமான எம்.பி.என்டர்டெய்மென்ட், முருகதாசின் சொந்த நிறுவனம் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் ஆகிய ஐந்து நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment