ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபு பட நாயகி திடீர் மாற்றமா?

  • IndiaGlitz, [Friday,July 08 2016]

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'அகிரா' படம் வரும் செப்டம்பர் 2 முதல் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்தில் மகேஷ்பாபு நடிக்கவுள்ளார் என்பதும் இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் தயாராகவுள்ளது என்பதும் தெரிந்ததே.
இந்நிலையில் இந்த படத்தில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக ப்ரிணிதி சோப்ரா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் தற்போது இந்த படத்தின் நாயகியாக ராகுல் ப்ரித்திசிங் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த படத்தின் நாயகி யார் என்பதை இயக்குனர் முருகதாஸ் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் தயாராக உள்ளது என்றும் இம்மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

More News

இன்று முதல் ஜோதிகாவுக்கு 20 நாட்கள் டிரெயினிங் ஆரம்பம்!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா கடந்த ஆண்டு '36 வயதினிலே' படத்தின் மூலம் ரீஎண்ட்ரி...

தமிழ் சினிமாவின் 'என்றும் இளமை' நாயகிகள்

பொதுவாக தமிழ் திரையுலகில் நாயகிகளின் காலம் மிகக்குறுகியது என்று கூறுவார்கள். ஒரு ஹீரோ நாற்பது, ஐம்பது வயதிலும் ஹீரோவாகவே நடிப்பார். ஆனால் டீன் ஏஜை தாண்டிய ஒருசில நாயகிகள் வாய்ப்பு இல்லாவிட்டால் அக்கா, அம்மா வேடத்திற்கு தயாராகிவிடுவார்கள் அல்லது திரையுலகை விட்டே காணாமல் போய்விடுவார்கள்...

சல்மான்கானின் 'சுல்தான்' முதல் நாள் வசூல் எவ்வளவு?

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் மற்றும் அனுஷ்கா சர்மா நடிப்பில் நேற்று வெளியான 'சுல்தான்' திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் ரூ.40 கோடியை தாண்டிவிட்டதாகவும்...

ஏ.ஆர்.ரஹ்மானிடம் வாழ்த்து பெற்ற சுந்தர் சி

கோலிவுட் திரையுலகில் வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் 100வது படம் 'பாகுபலி' மற்றும் '2.0'...

'தல 57' படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு எங்கே?

நேற்று சென்னையில் 'தல 57' படத்தின் பூஜை நடைபெற்றது என்பதும், இந்த பூஜையில் இயக்குனர் சிறுத்தை சிவா, இசையமைப்பாளர் அனிருத்...