ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபு படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Monday,November 21 2016]

சோனாக்ஷி சின்ஹா நடித்த 'அகிரா' படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். அதிரடி ஆக்சன் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் 24ஆம் தேதி முதல் அகமதாபாத்தில் ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் குடியரசு தினமான ஜனவரி 26ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவல் மகேஷ்பாபு ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.,
மகேஷ்பாபு, ராகுல் ப்ரித்திசிங், எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

வங்கிக்கணக்கில் திடீரென வந்த ரூ.10 கோடி. அதிர்ச்சியில் பான்மசாலா வியாபாரி

ஜார்கண்ட் மாநிலத்தில் பான்மசாலா வியாபாரி ஒருவரின் வங்கிக்கணக்கில் திடீரென ரு.10 கோடி வந்ததால் வங்கி அதிகாரிகளும்...

சிம்பு, ஜி.வி.பிரகாஷ் படங்களின் சென்னை வசூல் நிலவரம்

கடந்த 11ஆம் தேதி வெளியான சிம்புவின் 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம் மற்றும் கடந்த வாரம் வெளியான ஜி.வி.பிரகாஷின் 'கடவுள் இருக்குறான் குமாரு' படங்களின் சென்னை வசூல் நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0' படத்தின் பிரமாண்டமான ஃபர்ஸ்ட்லுக் விழா துளிகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகாவின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் '2.0' ...

சூர்யாவின் 'எஸ் 3' பாடல்கள் ரிலீஸ் தேதி

பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'எஸ் 3' படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து பார்வையாளர்கள் எண்ணிக்கையில் பெரும் சாதனை...

ஷாலினி அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அஜித்தின் மனைவியும் பிரபல நடிகையுமான ஷாலினி அஜித் இன்று தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார். அவருக்கு நமது உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்