இயக்குனர் ஏஆர் முருகதாஸ் ஹீரோவுக்கு காயம்.. விலா எலும்பு முறிந்ததாக தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் ஹீரோவுக்கு விலா எலும்பு முறிந்து விட்டதாகவும் ஆனாலும் அவர் காயத்துடன் படப்பிடிப்பு உட்பட சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் பாலிவுட் திரைப்படம் ’சிக்கந்தர்’. இந்த படத்தில் சல்மான்கான் நாயகனாக நடித்து வரும் நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் இவர் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிலையில் பிக் பாஸ் படப்பிடிப்பின் போது தான் திடீரென சல்மான்கானுக்கு ஒரு சின்ன விபத்து ஏற்பட்டதாகவும் அப்போது அவரது விலா எலும்பு உடைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் காயத்திற்கு சிகிச்சை பெற்றுக் கொண்டே அவர் ’சிக்கந்தர்’ படப்பிடிப்பு மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.
சமீபத்தில் கூட தாராவி போன்ற ஒரு செட் போடப்பட்டு ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு படமாக்கப்பட்டபோது முக்கிய காட்சியில் சல்மான்கான் நடித்து கொடுத்தார். இந்த படத்தில் சல்மான் காலுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிகர் சல்மான்கான் படப்பிடிப்பில் மட்டுமின்றி தனது சகோதரி வைத்திருந்த விநாயகர் சிலை கரைப்பு விழாவில் கலந்து கொண்டதாக கூறப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com