அஜித்துக்காக ஏ.ஆர்.முருகதாஸ் 10 ஆண்டுகளாக வைத்திருந்த டைட்டில்.. நன்றி கூறிய பிரபல நடிகர்..!

  • IndiaGlitz, [Wednesday,April 24 2024]

அஜித்துக்காக ஏஆர் முருகதாஸ் கடந்த 10 ஆண்டுகளாக வைத்திருந்த டைட்டிலை தற்போது பிரபல நடிகரின் அடுத்த படத்திற்கு தந்துள்ள நிலையில் அந்த நடிகர் நன்றி தெரிவித்துள்ளார்.

அஜித் நடித்த ’தீனா’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஏஆர் முருகதாஸ் என்பதும் அதன் பின்னர் அஜித் நடிக்கும் படத்தை அவர் இயக்க முயற்சித்தும் அது இன்று வரை நடைபெறாமல் உள்ளது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் அஜித்தை வைத்து திரைப்படம் எடுத்தால் அந்த படத்திற்கு பயன்படுத்துவதற்காக கடந்த 10 ஆண்டுகளாக இயக்குனர் ஏஆர் முருகதாஸ் ’ரெட்ட தல’ என்ற டைட்டிலை வைத்திருந்த நிலையில் அந்த டைட்டிலை தற்போது அருண் விஜய்யின் அடுத்த படத்திற்காக கொடுத்துள்ளார்

அஜித் நடிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ’ரெட்ட தல’ என்ற படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திட்டமிட்ட நிலையில் அது நடக்காமல் போனதை எடுத்து தற்போது தனது உதவியாளர் திருக்குமரன், அருண் விஜய்யை வைத்து இயக்கும் படத்திற்காக அந்த டைட்டிலை ஏஆர் முருகதாஸ் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

சாம் சிஎஸ் இசையில் உருவாகும் இந்த படத்தில் அருண் விஜய், சித்தி இத்யானி, தன்யா ரவிச்சந்திரன், பிக் பாஸ் அல்டிமேட் டைட்டில் வின்னர் பாலாஜி முருகதாஸ் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது.