ரூ.400 கோடி பட்ஜெட் படத்தை இயக்குகிறாரா ஏ.ஆர்.முருகதாஸ்? ஹீரோ யார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் ஏஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை இயக்குவதற்கான ஆரம்பகட்ட பணிகளை செய்து வரும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் அடுத்ததாக 400 கோடி ரூபாய் பட்ஜெட் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான ஏ ஆர் முருகதாஸ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ என்ற படத்தை இயக்கிய பின்னர் கடந்த நான்கு வருடங்களில் எந்த படத்தையும் இயக்கவில்லை.
இந்த நிலையில் தற்போது அவர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை இயக்கவுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் படத்தை முடித்துவிட்டு அவர் அடுத்ததாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் படத்தை இயக்க இருப்பதாகவும், இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 400 கோடி என்றும் கூறப்படுகிறது.
ஏஆர் முருகதாஸ் ஏற்கனவே அமீர்கான் நடிப்பில் உருவான ’கஜினி’ அக்ஷய் குமார் நடிப்பில் உருவான ’ஹாலிடே’ மற்றும் சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் உருவான ’அகிரா’ ஆகிய பாலிவுட் திரைப்படங்களை இயக்கிய நிலையில் தற்போது மீண்டும் மாஸாக பாலிவுட் திரையுலகில் ரீ என்ட்ரி ஆக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments