விக்ரமை இயக்குவது எப்போது? ஏ.ஆர்.முருகதாஸ் பதில்

  • IndiaGlitz, [Friday,September 18 2015]

'ஐ' படத்தை அடுத்து விக்ரம் நடித்து வரும் '10 எண்றதுக்குள்ள' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் அக்டோபர் 21ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ளதாக அதிகாரபூர்வமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டதால் இரவுபகலாக இந்த படத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று இந்த படத்தின் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியில் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ், இயக்குனர் விஜய் மில்டன் மற்றும் நாயகன் விக்ரம் மற்றும் நாயகி சமந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் விக்ரமை வைத்து எப்போது படம் இயக்குவீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த ஏ.ஆர்.முருகதாஸ், 'எனக்கு தெரிந்து ஒரு கேரக்டருக்காக ஒரு நடிகர் இவ்வளவு அதிகமாக ரிஸ்க் எடுப்பவர்களை பார்த்ததில்லை. விக்ரம் ஏற்கனவே அந்நியன், 'ஐ', 10 எண்றதுக்குள்ள' போன்ற வித்தியாசமான கேரக்டரில் நடித்துவிட்டார். இதையெல்லாம் விட சிறப்பாக ஒரு கேரக்டரை நான் உருவாக்கிய பின்னர் அவரை வைத்து கண்டிப்பாக ஒரு படம் இயக்குவேன்' என்று கூறினார்

விஜய் மில்டன் இந்த நிகழ்ச்சியில் பேசும்போது, 'நான் கோலி சோடா படத்தில் 6 சிறுவர், சிறுமிகளை வைத்து படமெடுத்தேன். ஆனால் இந்த படத்தில் நான் கையாண்டது ஒருசிறுமி மற்றும் ஒரு சிறுவர் மட்டுமே, அவர்கள் விக்ரமும் சமந்தாவும்தான்' என்று கூறினார்.

More News

ஒரே நாளில் 8 காட்சிகளா? புலியின் அடுத்த சாதனை

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் 'யூ' சர்டிபிகேட் பெற்று வரும் அக்டோபர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில் இன்று ரிலீஸ் தேதியுடன் முன்னணி பத்திரிகையில் விளம்பரமும் வெளிவந்துள்ளது.....

கமலிடம் மன்னிப்பு கேட்டது ஏன்? ராஜேஷ் எம்.செல்வா

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்' திரைப்படத்தின் டிரைலர் நேற்று ரிலீஸாகி, கமல் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தில் பணிபுரிந்தபோது கமலுடன் ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவங்கள் குறித்து இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.....

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாவாரா தல-தளபதி நாயகி?

புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்ற பழமொழிக்கேற்ப திரையுலகில் நுழைந்த ஒருசில வருடங்களிலேயே தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நாயகியாகிவிட்டார் நடிகை ஸ்ருதிஹாசன்......

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா விடலை விருந்து

சிறந்த இசையமைப்பாளராக அறியப்படும் ஜி.வி.பிரகாஷ் ‘டார்லிங்’ என்ற வெற்றிப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். எந்த ஒரு துறையிலும் முதல் முயற்சியைப் போலவே இரண்டாவது முயற்சியும் முக்கியத்துவம் வாய்ந்தது. அறிமுக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் சென்னை இளைஞராக நடித்திருக்கும் இந்தப் படம் அதற்கான த

'49 ஓ' திரைவிமர்சனம் கவுண்டமணியின் கர்ஜனைக்கு ஒரு 'ஓ'

நீண்ட இடைவெளிக்கு பின்னர் நகைச்சுவை அரசர் கவுண்டமணி, ரீ-எண்ட்ரி ஆகியுள்ளார். அதுவும் கதாநாயகனாக...இத்தனை ஆண்டுகள் ஓய்வில் இருந்த கவுண்டமணி, ஒரு அறிமுக இயக்குனர் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததில் இருந்தே, இந்த படத்தில் ஏதோ புதுமையாக இருக்கின்றது என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தனர். அந்த எதிர்பார்ப்பை கவுண்டமணியும், அறி