'துப்பாக்கி' வில்லனை களமிறக்கிய ஏ.ஆர்.முருகதாஸ்.. 'எஸ்கே 23' படமும் அதே போல் இருக்குமா?

  • IndiaGlitz, [Saturday,March 30 2024]

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ’எஸ்.கே 23’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ருக்மணி வசந்த் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தில் வேறு எந்தெந்த நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள் என்பது குறித்து அறிவிப்பு இல்லாத நிலையில் தற்போது இந்த படத்தின் வில்லனாக ’துப்பாக்கி’ படத்தில் அட்டகாசமாக நடித்த வில்லன் நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ்.. இயக்கத்தில் உருவான ’துப்பாக்கி’ படத்தின் முக்கிய வில்லனாக வித்யூத் ஜாம்வால் நடித்திருந்தார் என்பதும் இவரது அட்டகாசமான கேரக்டர்தான் படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது மீண்டும் ’எஸ்கே 23’ படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் ’எஸ்கே 23’ படத்தில் வித்யூத் ஜாம்வால் வில்லனாக நடித்திருப்பதாகவும் சிவகார்த்திகேயன் - வித்யூத் ஜாம்வால் ஆகிய இருவருக்கும் இடையிலான ஸ்டண்ட் காட்சி ஒன்று சமீபத்தில் படமாக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த தகவலை அடுத்து ’துப்பாக்கி’ படம் போல் ’எஸ்கே 23 படம்’ இருக்குமா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.