பூஜையுடன் துவங்கிய ஏ.ஆர்.முருகதாஸ்- சிவகார்த்திகேயன் திரைப்படம்.. புகைப்படஙக்ள் இதோ..!

  • IndiaGlitz, [Thursday,February 15 2024]

இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஆக்சன் எண்டர்டெயினர் திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் கோலாகலமாகத் துவங்கியுள்ளது. படக்குழுவினர் மற்றும் திரையுலக விருந்தினர்கள் கலந்து கொள்ள நேற்று பூஜை நடந்த நிலையில், இன்று படப்பிடிப்பு கோலாகலமாகத் துவங்கியுள்ளது.

தமிழ் திரையுலகில், பல ப்ளாக்பஸ்டர் படங்களைத் தந்து, பிரம்மாண்ட கமர்ஷியல் படங்களுக்கு புதிய இலக்கணம் தந்த இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும், இந்த ஆக்சன் படத்தின் அறிவிப்பே, ரசிகர்களுக்கு உற்சாகம் தந்தது. இந்நிலையில் தற்போது படப்பிடிப்பு பணிகள் துவக்கப்பட்ட அதிகாரப்பூர்வ செய்தி, ரசிகர்களுக்குப் பெரிய விருந்தாக அமைந்துள்ளது.

இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் வித்தியாசமான களத்தில், தனது முத்திரையுடன் கூடிய பரபரப்பான திரைக்கதையில், இந்திய சினிமாவில் ஒரு புதிய பிரம்மாண்டமாக, புதுமையான களத்தில், அனைவரும் கொண்டாடும் ஆக்சன் கமர்ஷியல் எண்டர்டெயினராக இப்படத்தை உருவாக்கவுள்ளார்.

தமிழ் திரையுலகில் தொடர்ச்சியாக, ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படங்களைத் தந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் திரை வாழ்வில், மிகப் பிரம்மாண்டமான படமாக இப்படம் இருக்கும். இதுவரை திரையில் தோன்றியிராத மிக வித்தியாசமான ஸ்டைலீஷ் தோற்றத்தில் இப்படத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். சமீபத்தில் தென்னிந்தியா முழுக்க, இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட, கன்னட நடிகை ருக்மணி வஸந்த் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

ஶ்ரீ லக்‌ஷ்மி மூவீஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில், பிரம்மாண்ட படைப்பாக, இப்படத்தைத் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் சுதீப் எலமான் ஒளிப்பதிவு செய்கிறார். ஶ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளைக் கவனிக்க, அருண் வெஞ்சரமுது கலை இயக்கம் செய்கிறார். சண்டை காட்சிகள் மாஸ்டர் திலீப் சுப்புராயன் வடிவமைக்க உள்ளார்.

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் முழு விவரங்கள் ஒவ்வொன்றாக, அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

More News

காதலர் தினத்தில் மனைவியுடன் ஒரு ரொமான்ஸ் போட்டோஷூட்..  ஜாலி மூடில் கவின் - மோனிகா தம்பதி..!

சமீபத்தில் தனது காதலி மோனிகாவை திருமணம் செய்து கொண்ட நடிகர் கவின் காதலர் தினத்தில் எடுத்த போட்டோஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கார்த்தி தங்கையாக நடிக்க ஒப்புக் கொண்ட பிரபல நடிகை.. என்ன காரணம்?

பொதுவாக பிரபல நடிகைகள் பிரபல ஹீரோக்களுக்கு சகோதரியாக நடிப்பதற்கு தயங்குவார்கள் என்பதும் பல நடிகைகள் அப்படி வாய்ப்பு வந்த போது நடிக்க முடியாது என்று கூறி இருப்பதாகவும்

நீங்கள் ஏன் அம்மா இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறீர்கள்?  நடிகையின் மகன் கேட்ட கேள்வி..!

பிரபல நடிகையிடம் அவருடைய மகன் 'நீங்கள் ஏன் அம்மா இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறீர்கள்' என்று கேள்வி கேட்டதாக அவரே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

காதலர் தினத்தில் ஒரு ஆன்மீக அனுபவம்.. அமலாபால் பகிர்ந்த புகைப்படம் வைரல்..!

நேற்று காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில் பல திரையுலக பிரபலங்களும் காதலர் தின கொண்டாட்டம் குறித்த புகைப்படத்தை பதிவு செய்தனர் என்பதை பார்த்தோம்.

மீண்டும் தீவிர அரசியலில் நடிகை கெளதமி .. முக்கிய கட்சியில் இணைந்ததால் பரபரப்பு..!

நடிகை கெளதமி கடந்த மாதம் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில் திடீரென இன்று அவர் தமிழகத்தின் முன்னணி கட்சியில் இணைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.