முருகதாஸ்-பிரியதர்ஷன் தேசிய விருது சர்ச்சை குறித்து கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Saturday,April 15 2017]

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 64வது தேசிய விருது குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளிவந்தது. தேசிய விருது கொடுப்பதில் பாரபட்சம் பார்க்கப்படுவதாக பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூற அதற்கு பிரியதர்ஷன் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் மீண்டும் முருகதாஸ் தனது டுவிட்டரில் இது தன்னுடைய கருத்து மட்டுமல்ல என்றும் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் கருத்து என்றும் வீணாக விவாதம் செய்வதை விட்டுவிட்டு உண்மையை வெளிக்கொண்டு வாருங்கள் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் இதுகுறித்து பிரபல பாடகர் டி.எம்.கிருஷ்ணா கூறியபோது, 'விருதுகள் வழங்கப்படுவதில் இன்று நேற்றல்ல, பல காலமாக முறைகேடுகள் நடந்து வருவதாகவும், இதுவும் ஒருவகை ஊழல் என்றும் ஆனால் இந்த ஊழல் குறித்து யாரும் பெரிதாக பேசுவதில்லை' என்றும் அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து உலகநாயகன் கமல்ஹாசனிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், '12 பேர் முடிவு செய்தது. அதில் நல்லதும் இருக்கலாம். கெட்டதும் இருக்கலாம்' என்று குறிப்பிட்டார்.

More News

சசிகலாவின் நெருங்கிய உறவினர் திடீர் மரணம்

சசிகலாவின் சகோதரர் வினோதகனின் மூத்த மகன் மகாதேவன் திடீரென மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 47....

ஒவ்வொரு அடிக்கும் 100 ஜிகாதிகள் கொல்லப்பட வேண்டும். கவுதம் காம்பீர் ஆவேசம்

சமீபத்தில் நடந்த ஸ்ரீநகர் தேர்தலின்போது வாக்கு இயந்திரத்தை கொண்டு சென்ற சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது சில ஜிகாதிகள் தாக்குதல் நடத்தி அவமதித்த வீடியோ ஒன்று நாடு முழுவதும் பரவி பெரும் கண்டன அலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவம் குறித்து உலக நாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் கூறிய கருத்து குறித்து நேற்று பார்த்தோம்...

விஜய், சூர்யாவை அடுத்து அஜித்துடன் நடிப்பது எப்போது? கீர்த்தி சுரேஷ்

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராகிய கீர்த்திசுரேஷ் குறுகிய காலத்தில் இளையதளபதி விஜய்யுடன் 'பைரவா' மற்றும் சூர்யாவுடன் 'தானா சேர்ந்த கூட்டம்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்...

சமண முனிவருக்கு ஈடானவர் பாரதிராஜா: கமல்ஹாசன்

பிரபல இயக்குனர் பாலுமகேந்திராவின் 'கூத்துப்பட்டறை'க்கு பின்னர் பாரதிராஜா தற்போது சினிமாவுக்கு என ஒரு தனி பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளார். 'பாரதிராஜா இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சினிமா' என்ற இந்த சினிமா பயிற்சி மையத்தின் தொடக்கவிழா நேற்று சிறப்பாக நடந்தது...

வடபழனி கோவிலில் பிச்சை எடுத்த ஜமுனாவுக்கு விஷால் உதவி

சிவாஜி கணேசன், ஜெயலலிதா, சிவகுமார் ஆகியோர்களுடன் நடித்த குரூப் டான்சர் ஜமுனா என்பவர் சென்னை வடபழனி கோவிலில் பிச்சை எடுப்பதாகவும், அவர் தனக்கு, தயாரிப்பாளர் சங்க தலைவர் மற்றும் நடிகர் சங்க செயலாளர் விஷால் உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்த செய்தியையும் சமீபத்தில் பார்த்தோம்...