ஏ ஆர் முருகதாஸ் படத்தின் படப்பிடிப்பிற்காக - சென்னையில் மகேஷ் பாபு

  • IndiaGlitz, [Tuesday,September 20 2016]

தென்னிந்தியாவின் மிக அழகான நடிகரும் தெலுங்கு சூப்பர் ஸ்டாருமான மகேஷ்பாபுவும், இந்தியாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவருமான ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களும் இணைந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே ஐதராபாத்தில் முடிந்தது. இந்நிலையில் தற்போது சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக சென்னை அருகே அமைக்கப்பட்ட பிரமாண்ட அரங்கத்தில் 20 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக சென்னை வந்த மகேஷ்பாபு தமிழ் ரசிகர்களுக்கு உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளார்.
சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி வரும் இந்த படம் வர்த்தக ரீதியாக புதியதொரு சாதனையை படைக்கும்" என்று தயாரிப்பாளர் மது கூறியுள்ளார்.

More News

விஜய் நடனத்தை முயற்சி செய்த விக்ரம்

சீயான் விக்ரம் நடித்த 'இருமுகன்' திரைப்படம் கடந்த 8ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது...

அஜித் படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிரபல காமெடி நடிகர்

தல அஜித் நடித்து வரும் 'தல 57' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் 23ஆம் தேதி முதல் ஆரம்பமாகவுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

செளந்தர்யா ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இரண்டாவது மகளும், 'கோச்சடையான்' பட இயக்குனருமான செளந்தர்யா ரஜினிகாந்த்...

ஒரே நாளில் பணியை தொடங்கும் ரஜினி-அஜித்

தல அஜித் நடித்து வரும் 'தல 57' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் 23ஆம் தேதி வெள்ளி முதல் தொடங்கும் என்பதை நேற்று பார்த்தோம்...

அடுத்த கட்டத்திற்கு செல்கிறது விஜய்யின் 'பைரவா'

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில்...