தயவுசெய்து வேண்டாம்.. படிக்கும் போது மனம் உடைகிறது: ஏ.ஆர்.ரஹ்மான் மகன் அமீன்
Send us your feedback to audioarticles@vaarta.com
எனது தந்தை பற்றிய பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம். அதை படிக்கும் போது எனது மனம் உடைகிறது என்று ஏ.ஆர்.ரஹ்மான் மகன் அமீன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது 30 ஆண்டுகால திருமண உறவை முறித்து கொள்வதாக அறிவித்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில்,ஏ.ஆர்.ரஹ்மான்- சாய்ரா பானு விவாகரத்துக்கான சில காரணங்களை வதந்திகளாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருவதற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் மகன் அமீன் வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து மேலும் கூறியதாவது:
"என்னுடைய தந்தை ஒரு லெஜண்ட். அவருடைய பணிக்காக மட்டும் இல்லாமல், நான் 'லெஜண்ட்' என்று சொல்லவில்லை. அவருடைய பண்புகள், இத்தனை ஆண்டு அவர் சம்பாதித்து வைத்த மரியாதை ஆகியவற்றைக் கொண்டு தான் நான் அவரை 'லெஜண்ட்' என்று சொல்கிறேன்.
தயவுசெய்து எனது தந்தை குறித்து பொய்யான செய்திகளை பரப்பாதீர்கள். அதை பார்க்கும்போது மனம் உடைகிறது. மற்றவர்களின் வாழ்க்கையை பற்றிப் பேசும்போது அதில் இருக்கும் உண்மை என்ன என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். என் தந்தை குறித்து பொய்யான தகவல் பரப்புவதை தயவு செய்து தவிர்க்கவும். அவரது கண்ணியத்தை நாம் போற்றி பாதுகாப்போம்" என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments