இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் ஏ.ஆர். அமீனின் புதிய ட்ராக்: தமிழில் முதல் டிரெண்டிங் பாடல். 

  • IndiaGlitz, [Monday,January 30 2023]

ஏ.ஆர். அமீன் இசையில் ‘அடியே சோனாலி’ ரீல்ஸில் தமிழில் வெளிவரவிருக்கும் புதிய டிரெண்டிங் பாடல். இந்த பாடல் இன்ஸ்டாகிராமில் இந்த வாரம் திங்கட்கிழமை வெளியிடப்பட்டது. இந்த 4 நாட்களுக்குள் 2 மில்லியன் முறை இந்த பாடல் பிளே செய்யப்பட்டுள்ளது.

கலைஞர்கள் மற்றும் பாடலாசிரியர்களை ரீல்ஸில் பாடல்களை உருவாக்கி வெளியிடவும், தளத்தில் அந்த பாடல் வேகமாக வைரல் ஆகும் போது அவை பார்வையாளர்களால் அதிகமாக கண்டறியப்பட்டு பாப் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும் வாய்ப்பை அந்த பாடலுக்கு வழங்கவும், அவர்களை ஊக்குவிக்கவும் மெட்டா கடந்த ஆண்டு (#1MinMusic) # 1 மினிட் மியூசிக் என்ற புதிய மியூசிக் ப்ராபர்டியை வெளியிட்டது. இந்த மியூசிக் ப்ராபர்டியில் தங்கள் இசையை வெளியிட்ட கலைஞர்களில் ஜி.வி.பென்னி தயால் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் அடங்குவர். இப்பொழுது, அமீன் தனது இசையில் உருவான முதல் பாடல் ‘‘ அடியே சோனாலி ’யின் புதிய டிராக்கை (#1MinMusic) # 1 மினிட் மியூசிக்கில் வெளியிட உள்ளார். பாடல் வரிகளை அவரது தந்தை, புகழ்பெற்ற ஏஆர் ரஹ்மான் மற்றும் பாடலாசிரியர் குட்டி ரேவதி எழுதியுள்ளார்,

ஏ.ஆர். அமீன் கூறுகையில், அதிகளவில் “ரீல்ஸில் இசையானது கண்டெடுக்கப்பட்டு, இன்ஸ்டாகிராமில் உள்ள படைப்பாளிகள் மற்றும் மக்களால் அவர்களின் உள்ளடக்கங்களில் பயன்படுத்தப்படுகிறது. இசை எப்போதுமே மக்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளும் ஒரு பாதையாக இருந்து வந்துள்ளது. ஆனால் இது இப்போது குறுகிய வடிவ வீடியோ பிளாட்ஃபார்ம்களுடன் இணைந்துள்ளதால் அவர்கள் அதில் அதிகமாக ஈடுபடுவதற்கான வாய்ப்பைப் பெறுகிறார்கள். (#1MinMusic) # 1 மினிட் மியூசிக்கிற்காக (Meta )மீட்டா உடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் தங்கள் ரீல்களில் ‘அடியே சோனாலி’பாடலைப் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

ஃபேஸ்புக் இந்தியாவின் (மெட்டா) உள்ளடக்கம் மற்றும் சமூகக் கூட்டாண்மைகளின் இயக்குநர் பராஸ் ஷர்மா கூறுகையில், இசையானது “ரீல்ஸின் போக்குகளை இயக்குகிறது. இந்தியா முழுவதும் உள்ள கலைஞர்கள் இன்ஸ்டாகிராமில் பாடல்களை வெளியிடுகிறார்கள். மேலும், அவை உலகளவில் கண்டறியப்பட்டு வருகின்றன. இப்போது ஏ.ஆர். அமீன் பாடல் எங்களுக்கு கிடைத்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அமீன் எங்கள் (#1MinMusic) # 1 மினிட் மியூசிக் சொத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள மக்கள் அவரது திறமையை அனுபவித்து உணர்ந்து, அவற்றை தங்கள் ரீல்களில் ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தலாம்.

கடந்த ஆண்டில், இன்ஸ்டாகிராம் அதன் இசை அம்சங்களில் பல கூடுதல் மேம்படுத்தல்களைச் செய்துள்ளது. ஃபீட் போஸ்ட், சேவ் சவுண்ட்ஸ், வாய்ஸ்ஓவர், மிக்ஸ்டு ஆயோ, சூப்பர் பீட், 2டி மற்றும் 3டி பாடல் வரிகள், ஆடியோ பிரவுசர் உள்ளிட்டவை இதில் அடங்கும். 2022 இல் ரீல்ஸில் ட்ரெண்ட் ஆன தென்னிந்தியாவின் பாடல்கள் ‘அரபிக் குத்து’, ‘ரஞ்சிதமே’ மற்றும் ‘பத்தல பத்தல’.

ஏ.ஆர் அமீனின் பாடலைக் கேட்க, அவரது @arrrameen . இன்ஸ்டாகிராம் அகௌண்டைப் பார்க்கவும் (https://www.instagram.com/p/CnwtwGmLabG/)
 

More News

நடிகை பூஜா ஹெக்டே வீட்டில் நடந்த திருமணம்.. வைரல் புகைப்படங்கள்!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' உள்பட பல திரைப்படங்களில் நாயகியாக நடித்து தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை பூஜா ஹெக்டே.

விக்ரமனுக்கு டைட்டில் கிடைக்காததற்கு காரணம் 'பீப்' பிரியாணியா? பா ரஞ்சித்தின் நக்கல் பதில்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது விக்ரமன் மாட்டுக்கறி சாப்பிட கேட்டதாகவும் அதனால்தான் அவருக்கு பிக்பாஸ் டைட்டில் கிடைக்கவில்லை என்று சமூக வலைதளங்களில் கூறப்பட்டு

'தளபதி 67' படத்தில் சிம்பு தான் மெயின் வில்லனா? லோகேஷ் கொடுத்த ஹிண்ட் இதுதானா?

 விஜய் நடித்துவரும் 'தளபதி 67' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் குறித்த தகவல்கள் தினந்தோறும் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தை மூழ்கடித்து வருகிறது

பிக்பாஸ் நடிகையின் தாய் புற்றுநோயால் மரணம்.. ஆறுதல் கூறும் திரையுலகினர்!

 பிக்பாஸ் இந்தி நிகழ்ச்சியில் மூன்று முறை கலந்து கொண்ட நடிகையின் தாயார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணம் அடைந்ததாக வெளிவந்த செய்தியை அடுத்து நடிகைக்கு திரையுலகினர்

'சந்திரமுகி 2' கிளைமாக்ஸ் பாடலில் கங்கனா ரனாவத்.. நடன இயக்குனர் யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி' திரைப்படம் கலந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் 18 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.