இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் ஏ.ஆர். அமீனின் புதிய ட்ராக்: தமிழில் முதல் டிரெண்டிங் பாடல்.
Send us your feedback to audioarticles@vaarta.com
ஏ.ஆர். அமீன் இசையில் ‘அடியே சோனாலி’ ரீல்ஸில் தமிழில் வெளிவரவிருக்கும் புதிய டிரெண்டிங் பாடல். இந்த பாடல் இன்ஸ்டாகிராமில் இந்த வாரம் திங்கட்கிழமை வெளியிடப்பட்டது. இந்த 4 நாட்களுக்குள் 2 மில்லியன் முறை இந்த பாடல் பிளே செய்யப்பட்டுள்ளது.
கலைஞர்கள் மற்றும் பாடலாசிரியர்களை ரீல்ஸில் பாடல்களை உருவாக்கி வெளியிடவும், தளத்தில் அந்த பாடல் வேகமாக வைரல் ஆகும் போது அவை பார்வையாளர்களால் அதிகமாக கண்டறியப்பட்டு பாப் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும் வாய்ப்பை அந்த பாடலுக்கு வழங்கவும், அவர்களை ஊக்குவிக்கவும் மெட்டா கடந்த ஆண்டு (#1MinMusic) # 1 மினிட் மியூசிக் என்ற புதிய மியூசிக் ப்ராபர்டியை வெளியிட்டது. இந்த மியூசிக் ப்ராபர்டியில் தங்கள் இசையை வெளியிட்ட கலைஞர்களில் ஜி.வி.பென்னி தயால் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் அடங்குவர். இப்பொழுது, அமீன் தனது இசையில் உருவான முதல் பாடல் ‘‘ அடியே சோனாலி ’யின் புதிய டிராக்கை (#1MinMusic) # 1 மினிட் மியூசிக்கில் வெளியிட உள்ளார். பாடல் வரிகளை அவரது தந்தை, புகழ்பெற்ற ஏஆர் ரஹ்மான் மற்றும் பாடலாசிரியர் குட்டி ரேவதி எழுதியுள்ளார்,
ஏ.ஆர். அமீன் கூறுகையில், அதிகளவில் “ரீல்ஸில் இசையானது கண்டெடுக்கப்பட்டு, இன்ஸ்டாகிராமில் உள்ள படைப்பாளிகள் மற்றும் மக்களால் அவர்களின் உள்ளடக்கங்களில் பயன்படுத்தப்படுகிறது. இசை எப்போதுமே மக்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளும் ஒரு பாதையாக இருந்து வந்துள்ளது. ஆனால் இது இப்போது குறுகிய வடிவ வீடியோ பிளாட்ஃபார்ம்களுடன் இணைந்துள்ளதால் அவர்கள் அதில் அதிகமாக ஈடுபடுவதற்கான வாய்ப்பைப் பெறுகிறார்கள். (#1MinMusic) # 1 மினிட் மியூசிக்கிற்காக (Meta )மீட்டா உடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் தங்கள் ரீல்களில் ‘அடியே சோனாலி’பாடலைப் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
ஃபேஸ்புக் இந்தியாவின் (மெட்டா) உள்ளடக்கம் மற்றும் சமூகக் கூட்டாண்மைகளின் இயக்குநர் பராஸ் ஷர்மா கூறுகையில், இசையானது “ரீல்ஸின் போக்குகளை இயக்குகிறது. இந்தியா முழுவதும் உள்ள கலைஞர்கள் இன்ஸ்டாகிராமில் பாடல்களை வெளியிடுகிறார்கள். மேலும், அவை உலகளவில் கண்டறியப்பட்டு வருகின்றன. இப்போது ஏ.ஆர். அமீன் பாடல் எங்களுக்கு கிடைத்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அமீன் எங்கள் (#1MinMusic) # 1 மினிட் மியூசிக் சொத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள மக்கள் அவரது திறமையை அனுபவித்து உணர்ந்து, அவற்றை தங்கள் ரீல்களில் ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தலாம்.
கடந்த ஆண்டில், இன்ஸ்டாகிராம் அதன் இசை அம்சங்களில் பல கூடுதல் மேம்படுத்தல்களைச் செய்துள்ளது. ஃபீட் போஸ்ட், சேவ் சவுண்ட்ஸ், வாய்ஸ்ஓவர், மிக்ஸ்டு ஆயோ, சூப்பர் பீட், 2டி மற்றும் 3டி பாடல் வரிகள், ஆடியோ பிரவுசர் உள்ளிட்டவை இதில் அடங்கும். 2022 இல் ரீல்ஸில் ட்ரெண்ட் ஆன தென்னிந்தியாவின் பாடல்கள் ‘அரபிக் குத்து’, ‘ரஞ்சிதமே’ மற்றும் ‘பத்தல பத்தல’.
ஏ.ஆர் அமீனின் பாடலைக் கேட்க, அவரது @arrrameen . இன்ஸ்டாகிராம் அகௌண்டைப் பார்க்கவும் (https://www.instagram.com/p/CnwtwGmLabG/)
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments