வெறும் 7 ரூபாய் முதலீடு.. முதுமை காலத்தை இனிமையாக்க பெஸ்ட் பென்ஷன் திட்டம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமைப்புசாரா ஏழை, எளிய மக்களும் தங்களது முதுமை காலத்தை இனிமையாக கழிக்க உதவும் வகையில் மத்திய அரசு, அடல் பென்சன் யோசனா திட்டத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் அமைப்புச்சாரா தொழிலாளர்கள், தினசரி கூலி வேலைக்குச் செல்பவர்கள், எழுதப்படிக்கத் தெரியாத சாமானிய மனிதர்களும் பயன்பெற முடியும்.
இதற்கு ஒரு அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் உங்களுக்கு கணக்கு இருக்க வேண்டும். அந்த வங்கியில் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ APY எனப்படும் பென்ஷன் திட்டத்தை துவங்கலாம்.
இத்திட்டத்திற்கு உங்களுடைய ஆதார் கார்டு மற்றும் உங்களுக்கு பிறகு யார் நாமினியாக (Nominee) இருப்பார்கள் என்பதையும் விவரமாகத் தெரிவித்து விட வேண்டும்.
வங்கிக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள APY விண்ணப்பத்தை பெற்று அதைப் பூர்த்தி செய்து இந்தத் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். அல்லது ஆன்லைனில் கிடைக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதைப் பூர்த்திசெய்து வங்கியில் கொடுப்பதன் மூலமாகவும் இந்தத் திட்டத்தில் உங்களை இணைத்துக் கொள்ள முடியும்.
ஒருவேளை உங்களால் வங்கிக்கு செல்லவே முடியாது என்றாலும் ஆன்லைன் வாயிலாகவே இந்தத் திட்டத்தில் உங்களை எளிதாக இணைத்துக் கொள்ளும் வகையில் ஆன்லைன் அப்ளிகேஷன் செயல்பட்டு வருகிறது.
APY சேர விரும்பும் ஒரு நபருக்கு குறைந்தது 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். ஆனால் 40 வயதிற்கு மேல் யாராலும் இந்தத் திட்டத்தில் சேரமுடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த அடிப்படையில் 18-40 வயதில் உள்ள எந்தவொரு இந்திய ஆண்மகனோ அல்லது பெண்ணோ இதில் இணைந்து கொள்ளலாம்.
இதனால் குறைந்தது 20 வருடமாவது APY திட்டத்திற்கு நாம் பணம் செலுத்த வேண்டி இருக்கும். இப்படி செலுத்தும் பணமானது 60 வயதான பிறகு ஒவ்வொரு மாதம் அல்லது காலாண்டு, அரையாண்டு முறையில் விருப்பத்திற்கு ஏற்ப பெற்றுக்கொள்ளலாம்.
ஆனால் APY திட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்ட ஒரு நபர் இடையில் அந்தக் கணக்கில் இருந்து விலக முடியாது என்பதும் கவனிக்கத்தக்கது. அதேபோல மாதம் தோறும் செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாமல் விடும்போது அதற்கு அபராதம் விதிக்கப்படும்.
நாம் செலுத்தும் தொகைக்கு ஏற்ப விதிக்கப்படும் இந்த அபராதமானது குறைந்தது ரூ1-10 வரை மட்டுமே இருக்கும். மேலும் குறைந்தது 6 மாதம் தொடர்ந்து இந்தத் தொகையை செலுத்தாமல் விட்டால் உங்கள் APY கணக்கு தற்காலிகமாக முடக்கப்படும். அதேபோல தொடர்ந்து 1 வருடம் வரை பணம் செலுத்தாமல் விடும்போது உங்கள் APY கணக்கு முழுவதுமாக மூடப்படும். இதனால் பயனாளிக்கு எந்த பலனுக்கு கிடைக்காது.
APY பென்ஷன் திட்டத்தில் மாதம்தோறும் செலுத்த வேண்டிய தொகையானது நீங்கள் தேர்ந்தெடுக்கும் தொகை மற்றும் வயதைப் பொறுத்து மாறுபடும். இதனால் APY திட்டத்தின் அட்டவணையை இணையத்தில் டவுன்லோடு செய்து பார்த்து விடுங்கள்.
மேலும் 18 வயதில் ஒரு நபர் இந்தத் திட்டத்தில் சேர்ந்து 60 வயதிற்கு பிறகு ரூ.5000 பென்ஷன் பெற வேண்டும் என்றால் ஒரு நாளைக்கு ரூ.7 முதலீடு செய்ய வேண்டி இருக்கும். இதனால் ஒரு மாதத்திற்கு ரூ. 210 அந்த நபர் செலுத்துவார்.
இப்படி 18 வயதில் சேர முடியாத ஒரு நபர் தனது 40 வயது வரையில் எப்போது வேண்டுமானாலும் தன்னை இந்தத் திட்டத்தில் இணைத்துக் கொள்ளலாம். இதனால் குறைந்தது 20 ஆண்டுகளாவது இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டி இருக்கும்.
60 வயது பூர்த்தியாகும்போது பயனாளிக்கு அவரது வங்கிக் கணக்கிலேயே பணம் கிடைத்து விடுகிறது. ஒருவேளை இந்தத் திட்டம் பூர்த்தியாவதற்கு முன்பே அந்த நபர் உயிரிழந்து விட்டால் அவருடைய நாமினிக்கு மாதம்தோறும் பென்ஷன் வழங்கப்படும். அந்த நாமினியும் உயிரிழக்கும்போது நாமினியின் மகனோ அல்லது மகளோ ரூ.1.75 லட்சம் முதல் ரூ. 8.5 லட்சம் வரை காப்பீடு தொகை பெறமுடியும்.
அதாவது APY திட்டத்தில் ஒருநபர் இணைந்து தனது 60 வயது பூர்த்தி செய்யும்போது அவருக்கு மாதம்தோறும் பென்ஷன் தொகை அவருடைய வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்படும். அந்த நபர் தனது வயதான காலத்தில் உயிரிழந்து விட்டால் அவருடைய நாமினிக்கு இதேதொகை பென்ஷனாக கிடைக்கும். அந்த நாமினியும் ஒருவேளை உயிரிழக்கும்போது நாமினி பரிந்துரை செய்யும் நபருக்கு ரூ.8.5 லட்சம் வரை காப்பீடு தொகை வழங்கப்படும்.
இதனால் APY திட்டத்தில் நாம் செலுத்தும் தொகையானது ஒரு நாளைக்கு ரூ.7 என்ற அளவிலேதான் இருக்கும். ஆனால் கிடைக்கபோகும் லாபமே மிக அதிகம். இதைத்தவிர யாரையும் எதிர்ப்பார்க்காமல் வயதான காலத்தில் நிம்மதியாக வாழ இந்தத் தொகை நமக்கு ஊக்கத்தை தருகிறது.
இத்தனை நல்ல அம்சம் கொண்ட APY திட்டமானது மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் இயக்கப்படுகிறது. எனவே பயம் இல்லாமல் இன்றே இந்தத் திட்டத்தில் இணைந்து வளமான எதிர்கால வாழ்வை பெறுங்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout