9,10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறி தேர்வு...! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு...!
- IndiaGlitz, [Saturday,April 10 2021]
நடப்பாண்டில் தமிழகத்தில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக திறனறி தேர்வு நடத்தவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை முடிவுசெய்துள்ளது.
கொரோனா காரணமாக மாணவர்கள் பள்ளிக்கு வர முடியாது என்ற காரணத்தால் திறனறி தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 10 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த வருடம் பொதுத்தேர்வு கிடையாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் அறிவித்திருந்தார்.
ஆனால் மாணவர்கள் கல்வித்திறனில் எந்த அளவிற்கு திறனடைந்துள்ளனர் என்பதை பரிசோதிக்க, முதன்மை கல்வி அலுவலர்கள் சில கேள்விகளை வழங்க உள்ளார்களாம். இந்த கேள்விகள் வாட்ஸ்அப் மூலமாக அனுப்பப்பட்டு, திறனறி தேர்வுகள் நடக்கவுள்ளதாம். இதேபோல் 12-ஆம் வகுப்பு மாணவர்களும் புத்தகங்களை படித்து உள்ளார்களா..?என்பதை தெரிந்து கொள்ள இணையம் மூலமாக எளிமையான கேள்வி கேட்கப்படுகின்றன.
மேலும் பொதுத்தேர்வு இல்லாத காரணத்தால், மாணவர்களுக்கு படிப்பின் மீதுள்ள ஆர்வமும்,கல்வித்திறனும் குறையாமல் இருக்க 9,10 வகுப்பு மாணவர்களுக்கு திறனறி தேர்வுகள் நடைபெறுகின்றது. வாட்ஸ் அப் மூலம் கேள்வித்தாள்கள் அனுப்பப்பட்டு, இணையம் மூலமாக தேர்வு நடக்கவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை சார்பாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் திறனறி தேர்வில் சரியான விடையளிக்காவிட்டால் தேர்ச்சியா..?தேர்ச்சி இல்லையா..? என்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இன்னும் வெளிவரவில்லை.