தமிழகத்தில் தேர்தல் எப்போது? தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என செய்திகள் வெளிவந்த நிலையில் சற்று முன்னர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அவர்கள் தேர்தல் தேதியை அறிவித்தார்
தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் என்றும் மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் குறித்த முக்கிய தேதிகள் பின்வருமாறு:
வேட்புமனு தாக்கல் தொடங்கும் நாள் - மார்ச் 12
வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் - மார்ச் 19
வேட்புமனு மீதான பரிசீலனை - மார்ச் 20
வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் - மார்ச் 22
வாக்குப்பதிவு நாள் - ஏப்ரல் 6
வாக்கு எண்ணிக்கை நாள் - மே 2
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments