தலைமைச் செயலக சாலைகள் மூடல். அதிரடிப்படை குவிப்பு
- IndiaGlitz, [Saturday,February 18 2017]
நம்பிக்கை வாக்கெடுப்பிற்காக இன்று கூடிய சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டதால் சபை 1 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் சட்டசபைக்கு அதிகளவு அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும், தலைமைச்செயலகம் அமைந்துள்ள காமராஜர் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
மேலும் ரகளையால் ஒத்திவைக்கப்பட்ட பேரவை மீண்டும் ஒருசில நிமிடங்களில் கூடுகிறது. இருப்பினும் இன்று வாக்கெடுப்பு நடைபெறும் சூழல் ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.