பாராட்டுகளை குவித்து வரும் ஒரு பெண் அதிபர்!!! யார் தெரியுமா???
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாடுகளில் தலைமை வகிக்கும் பெண் அதிபர்கள் கொரோனா பரவலை மிக நேர்த்தியாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் கையாண்டனர் என்ற பாராட்டு மழை குவிந்து வருகிறது. இந்நிலையில் நியூசிலாந்தின் பெண் அதிபர் ஜெசிந்தா ஆர்டன் மேலும் பல காரணங்களுக்காக பாராட்டுகளைப் பெற்று வருகிறார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதத்தில் அவர் கையாண்ட அனைத்து திட்டங்களும் பரபரப்பு இல்லாமல் மிகவும் அமைதியான முறையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
நியூசிலாந்தில் ஊரடங்குத் தளர்த்தப் பட்டவுடன் அந்நாட்டின் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் விதமாக நாட்டில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களிலும் வாரத்தில் 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கலாம் என்ற ஆலோசனையை நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அவர் முன்மொழிந்தார். ஒரு வேளை நம் நாடாக இருந்தால் கண்டிப்பதாக எதிர்ப்பு வந்திருக்கும். நமது மாநிலங்கள் இப்போதுதான் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக மாற்றி அமைத்திருக்கிறது. ஆனால் நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் அப்படி ஒன்றும் ஆர்ப்பாட்டம் எழவில்லை. மாறாக எதிர்க் கட்சிகள் கூட அதிபரின் ஆலோசனைக்கு பாராட்டுகளைத் தெரிவித்து உள்ளன.
இந்நிலையில் நியூசிலாந்தின் தலைநகர் வெல்லிங்டனில் இன்று 5.8 ரிக்டேர் அளவிற்கு நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கம் உணரப்பட்ட சமயத்திலேயே அதிபர் நாட்டு மக்களுடன் நேரடியாக தொலைக்காட்சி வாயிலாக பேசவும் செய்தார். பேசும் போது மிக அமைதியாக “எனக்குப் பின்னால் பார்த்தாலே தெரியும் பொருட்கள் எல்லாம் அசைகின்றன. தலைநகர் வெல்லிங்கடனில் நிலநடுக்கம் கொஞ்சம் குறைவுதான். நாடாளுமன்றத்தில் அசைவுகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது” எனப் புன்னகை மாறாமல் நேர்த்தியான முறையில் பேசி நாட்டு மக்களிடம் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறார். கொரோனா நேரத்தையும் மிக இயல்பாக கையாண்டார் என்று ஊடகங்கள் பாராட்டி வருகின்றன. தற்போது நிலநடுக்கத்தின் போது அவர் பேசிய வீடியோ நாடு முழுவதும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. முன்னதாக கிறிஸ்ட் சர்ச் பயங்கரவாதத்தையும் அவர் மிகவும் சாமார்த்தியமாக கையாண்டார் எனப் பாராட்டப் பட்டு வருகிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout