அச்சுறுத்தலுக்கு இடையே இந்தியாவிற்கு நன்றி தெரிவித்த தாலிபான்கள்… என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்கள் கடந்த 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளனர். ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு தற்போது நாட்டை பிடித்துள்ளனர். இந்நிலையில் தாலிபான்களால் வெளிநாட்டு தூதரகங்களுக்கும், அங்குள்ள ஆப்கன் மக்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் பெண்களின் சுதந்திரம் தட்டிப் பறிக்கப்படும் என்றும் பல்வேறு அச்சம் நீடித்து வருகிறது.
இந்நிலையில் தாலிபான்களின் செய்தி தொடர்பாளர் முகமது சுசைல் ஷாஹீன் இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். காரணம் இந்தியா நட்பு அடிப்படையில் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு 2,000 கோடி மதிப்புள்ள “சல்மா“ எனும் அணையைக் கட்டித் தந்துள்ளது.
இதைத்தவிர ஆப்கன் மக்களின் நலனுக்காக தேசிய மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்கள், அந்நாட்டின் வளர்ச்சி, புணரமைப்பு மற்றும் பொருளாதார செழிப்பு போன்றவற்றிற்காக உதவியுள்ளது. இதை சுட்டிக்காட்டி தாலிபான்களின் செய்தி தொடர்பாளர் இந்திய பிரதமருக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கங்களுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார். அதோடு ஆப்கனில் உள்ள மற்ற நாட்டின் தூதரங்களையும் நாங்கள் தாக்க மாட்டோம் என்றும் தூதர அதிகாரிகளுக்கு எங்களால் ஆபதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள ஹீரத் மாகாணத்தில் ஹரி ஆற்றின் மீது கட்டப்பட்ட ரூ.2,000 கோடி மதிப்பிலான சல்மா அணையை இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் அந்நாட்டு அதிபர் அஷ்ரஃப் கானியும் இணைந்து கடந்த 2016 ஆண்டு திறந்துவைத்தனர்.
இதைத்தவிர குண்டுவெடிப்பினால் சிதைத்து கிடந்த அந்நாட்டு நாடாளுமன்றக் கட்டிடத்தையும் இந்தியா கடந்த 2015 ஆம் ஆண்டு சீரமைத்துக் கொடுத்துள்ளது. இந்த விஷயங்களுக்காக தாலிபான்கள் இந்தியாவிற்கு நன்றி தெரிவித்து இருப்பது பலரையும் வியக்க வைத்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout