வீரப்பனை பிடித்த ஐபிஎஸ் அதிகாரிக்கு காஷ்மீரில் முக்கிய பணி

  • IndiaGlitz, [Thursday,June 21 2018]

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சமீபத்தில் பாஜக தனது ஆதரவை விலக்கி கொண்டதால் மெகபூபா முப்தி ஆட்சி முடிவுக்கு வந்தது. மேலும் அம்மாநிலத்தில் தற்போது ஆளுனர் ஆட்சியும் அமல்படுத்தப்பட்டுள்ளது

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் கவர்னருக்கு ஆலோசகராக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் உள்பட இரண்டு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது. விஜயகுமார் ஐபிஎஸ் அவர்களும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தலைமை செயலாளர் வியாஸ் ஐஏஎஸ் அவர்களும் கவர்னருக்கு ஆலோசகராக இருப்பார்கள் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜயகுமார் ஐபிஎஸ் அதிகாரியாக தமிழகத்தில் பணிபுரிந்தபோது பல வருடங்களாக மூன்று மாநிலங்களுக்கு தண்ணி காட்டி கொண்டிருந்த சந்தனக்கடத்தில் வீரப்பனை சுட்டுபிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது