காதலில் சொதப்புவரா நீங்கள்? மனதில் கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
காதல், திருமணம், லிவ்-இன் உறவுகள் என எதுவாக இருந்தாலும் அதில் வெற்றிப்பெற வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் உண்மையில் எந்த வகை உறவாக இருந்தாலும் சரி, அதில் ஆயிரக்கணக்கான பிரச்சனைகள் முளைத்து நாளடைவில் அந்த உறவே toxis காக மாறிப்போகிற நிலைமை இன்று அதிகரித்து வருகிறது.
பொதுவாக காதல், திருமணம், லிவ்-இன் என்று இன்றைக்கு எல்லா இடங்களிலும் toxis என்ற வார்த்தை அதிகமாகப் பயன்படுத்தப் படுகிறது. இந்த toxis- ஐ முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு எந்த ஒரு மனிதனும் 100% புரிதலோடும் தூய்மையாகவும் வாழ முடியாது என்பதுதான் நிதர்சனம். ஆனால் ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் வாழ்க்கையில் சில புரிதல் உணர்வுகளோடு செயல்பட்டால் மோசமான பிரிவுகளையும் தோல்விகளையும் தவிர்க்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதலில் காதலை எடுத்துக் கொள்வோம். ஒரு ஆணோ, பெண்ணோ தங்களுக்கு ஏற்றமாதிரி ஒரு துணையைத் தேர்வு செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். முதலில் தன்னுடைய எதிர்பார்ப்பு என்ன என்பது குறித்து தெளிவாக இருக்க வேண்டும்.
எனக்கு அழகான பெண்தான் வேண்டும். பணக்கார மாப்பிளைதான் வேண்டும். என்பதுபோன்று தன்னுடைய தேவைகளைப் பற்றி வெளிப்படையான புரிதல் உணர்வு வேண்டும்.
இப்படி தன்னுடைய ஆசையை, தேவையை முடிவுசெய்த பின்பு அதில் எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதாவது எனக்கு ஒரு அழகான பெண் தேவைதானா? எனக்கெல்லாம் பணக்கார மாப்பிள்ளை கிடைப்பாரா? என்பதுபோன்ற எதிர்மறை எண்ணங்களை அறவே ஒழித்துவிட வேண்டும்.
அடுத்து உங்களுடைய தேவையை புரிந்துகொண்ட நண்பர்களோ அல்லது உறவினர்களோ, உங்களிடம் வந்து இதெல்லாம் நடக்குமா? இதெல்லாம் அவசியம்தானா? என்று எதிர்மறையாகப் பேசும்போது உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளக் கூடாது.
மேலும் தனக்கு பிடித்த மாதிரி ஒரு துணையை தேர்வுசெய்த பின்பு அதனால் வரப்போகிற விளைவுகளையும் நன்கு தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு அறிவாளி, ஒரு பணக்காரன், ஒரு அழகான ஆண் இப்படி தன்னுடைய தேவைக்கேற்ப ஒரு ஆணை தேர்வு செய்தபின்பு அவனுடைய வேலையாலும் மற்ற விஷயங்களினாலும் ஏதாவது சிறு பிரச்சனை வந்தால் அதை ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அதாவது உங்களை விட அழகான ஒரு துணையை தேர்வு செய்து விட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த அழகைப் பார்த்தே உங்களுடைய Self confidence குறைந்து போகக்கூடாது. ஒருவேளை இந்த இடத்தில் நீங்கள் உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளும்போதுதான் பிரச்சனை முளைக்கும் என்பதும் கவனிக்கத்தக்கது.
அடுத்து உங்களுடைய எதிர்ப்பார்ப்பு என்கிற ஒன்று இருப்பதுபோலவே உங்களுக்கு வரப்போகிற ஆணோ, பெண்ணோ அவருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்? அது என்ன என்பது குறித்த புரிதல் அவசியம்.
நீங்கள் எதிர்பார்க்கிற துணைக்காக சில நேரங்களில் உங்களுடைய பழக்க வழக்கங்கள், குணாதிசயங்கள், நடத்தை முறைகள் என்று பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டி இருக்கலாம். ஆனால் மாற்றங்களைச் செய்வது முக்கியமில்லை. இப்படி செய்வதால் எதிர்காலத்தில் வரும் விளைவுகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் உங்களுக்கு இருக்க வேண்டும்.
ஒரு பெண், ஒரு ஆணிடம் தனக்கான பாதுகாப்பைத்தான் முதலில் எதிர்பாக்கிறார். அதேபோல உடல் மற்றும் மனத் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டிய ஒரு பெரிய கதாபாத்திரமும் அவருடையதாக இருக்கிறது. இந்தக் கடமைகளை முழுமையாக புரிந்துகொண்டு யாரிடமும் விட்டுக்கொடுக்காமல் மனதளவிலும் உடல் அளவிலும் முழுமையான பாதுகாப்பை தரும் பட்சத்தில் அவர் தன்னுடைய காதலில் 100% வெற்றிப்பெற முடியும்.
அதேபோல ஒரு ஆண், ஒரு பெண்ணிடம் காதலையும் அக்கறையையும் முழுமையாக எதிர்பார்க்கிறார். மேலும் சோர்ந்து போகும் போது தன்னை தேற்றக்கூடிய ஒரு நம்பிக்கை பாத்திரமாகவும் ஒரு பெண் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஆணிடம் இயல்பாகவே ஏற்படுகிறது. இதுபோன்ற விஷயங்களைப் புரிந்து கொண்டு செயல்பட்டால் எந்த ஒரு பெண்ணும் தன்னுடைய காதலில் ஜெயிக்க முடியும்.
செய்கின்ற வேலை மற்றும் சூழல் காரணமாக இன்றைய காலக்கட்டத்தில் பெண், ஆண் பாகுபாடுகளெல்லாம் மாறிக்கொண்டே போகிறது. இதுபோன்ற சமயங்களில் அவர்களை அவர்களாகவே ஏற்றுக்கொள்கின்ற மனப்பக்குவம்தான் அவசியம்.
இந்த இடத்தில் இழிவு, தாழ்வுமனப்பான்மை, சுற்றி இருக்கும் உறவினர்கள், நண்பர்களின் அறிவுரை இதெல்லாம் அவசியமே இல்லாத ஒன்று என்பதையும் புரிந்து செயல்பட வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக காதலுக்கு அவசியமான ஒன்று நாம் நம்முடைய துணையிடம் என்ன எதிர்பாக்கிறோம் என்பதைவிட நமது துணைக்கு என்ன செய்ய போகிறோம்? அவரை எப்படி பார்த்துக் கொள்ள போகிறோம்? அவருக்கு எப்படி நம்பிக்கை அளிக்கப் போகிறோம்? என்று சிந்தித்தாலே உறுதியாக காதலில் ஜெயித்துவிட முடியும்.
காரணம் நம்முடைய எதிர்பார்ப்பைவிட நமது துணையின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்போது, இயல்பாகவே நமக்காக நமது துணையும் மெனக்கெட ஆரம்பித்து விடுவார்கள். இதுபோன்ற புரிதல்களின் மூலம் காதலில் வெற்றிப்பெற முடியும்.
காதலில் வேண்டாதது சுய மரியாதையை இழந்து, தாழ்வு மனப்பான்மையோடு செயல்படுவது. இந்த உணர்வுகள்தான் பிரச்சனைக்கு வழிவகுக்கிறது. எனவே நமக்காக என்று சிந்திக்காமல் நமது துணைக்காக என்று சிந்தியுங்கள் வெற்றி நிச்சயம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments