ஆத்திரமூட்டும் காரணம்… ஐபோன் தொழிற்சாலையை சூறையாடிய தொழிலாளர்கள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
பெங்களூருவில் உள்ள தைவான் நாட்டிற்குச் சொந்தமான ஐபோன் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை அதன் ஊழியர்களே சூறையாடிய சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் அந்த நிறுவனத்திற்கு ஏற்பட்ட இழப்பீட்டு தொகை மட்டும் ரூ.437 கோடியாக கணக்கிடப்பட்டு உள்ளது. இந்நிலையில் தொழிற்சாலையை சுக்கு நூறாக்கிய வழக்கில் 7 ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக 160 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இயங்கி வரும் விஸ்ட்ரான் தொழிற்சாலையில் ஐபோன்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் லெனோவா, மைச்ரோசாப்ட் போன்ற ஐடி தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான உதிரி பாகங்களும் இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விஸ்ட்ரான் கம்பெனியில் வேலைப்பார்த்து வந்த அனைத்துத் தொழிலாளர்களுக்கும் கடந்த 4 மாதமாக சம்பளம் கொடுக்கப்பட வில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
இந்தக் குற்றச்சாட்டை அடுத்து ஊழியர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி போராட்டத்தில் இறங்கினர். அந்தப் போராட்டத்தின்போது சம்பந்த பட்ட தொழிலாளர்களுக்கு அவர்களது ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும் மேலும் ஊதியத்தை குறைக்க கூடாது என்பது போன்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இந்நிலையில் பேராட்டக் காரர்களுடன் அந்நிறுவனம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு அது தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் தொழிலாளர்களின் ஊதியத்தை கொடுக்குமாறு நிறுவனத்திற்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது.
ஆனாலும் தொடர்ந்து விஸ்ட்ரான் நிறுவனம் ஊழியர்களுக்கு சம்பளத்தைக் கொடுக்காமல் இருந்ததால் கடந்த சனிக்கிழமை அன்று ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் அந்நிறுவனத்தின் மீது தாக்குதலை தொடுத்து இருக்கின்றனர். இதனால் ஐபோன் தொழிற்சாலையின் பெரும்பாலான பகுதிகள் சுக்கு நூறாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ரூ.437 கோடி சேதம் ஏற்பட்டு உள்ளதாக விஸ்ட்ரான் நிறுவனம் வழக்குத் தொடுத்து உள்ளது.
அதில் நான்கு கார்கள், இரண்டு கோல்ஃப் கார்கள், கேண்டீன், டிவிக்கள், லேப்டாப்கள், தொலைபேசிகள், உற்பத்தி இயந்திரங்கள், ஒரு ஏடிஎம் இயந்திரம், தனிப்பட்ட ஆவணங்கள், பணம் போன்றவற்றை ஊழியர்கள் சேதப்படுத்தி விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் 7,000 தொழிலாளர்கள் மீது வழக்குப் பதியப்பட்டு உள்ளன. மேலும் 160 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் 5,000 பேர் அடையாளம் தெரியாத ஒப்பந்த தொழிலாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments