தண்ணீரில் மிதக்கும் ஆப்பிள் ஸ்டோர்… சுவாரசியத் தகவல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிங்கப்பூரில் ஆப்பிள் நிறுவனம் தனது மூன்றாவது விற்பனை நிலையத்தை தொடங்கியிருக்கிறது. எப்போதும்போல் இல்லாமல் இந்த விற்பனை நிலையம் முற்றிலும் தண்ணீரில் மிதக்க கூடியது என்பதுதான் பெரிய சுவாரசியமே. உருண்மை வடிவம் கொண்ட முற்றிலும் கண்ணாடியால் செய்யப்பட்ட இந்த விற்பனை நிலையம் முழுக்க முழுக்க தண்ணீரில் மிதந்து கொண்டே இருப்பது மாதிரி வடிவமைக்கப் பட்டுள்ளது.
மெரினா பே சாண்ட்ஸ் எனும் பெயரிடப்பட்ட இந்த விற்பனை நிலையத்தில் 23 மொழிகளைப் பேசக்கூடிய 150 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். வாடிக்கையாளர்களிடம் தங்களது பொருட்களைக் குறித்து விளக்குவதற்கு இந்த ஏற்பாடாம். அழகிய உருளை வடிவம் கொண்ட இந்தக் கண்ணாடி கட்டிடத்தில் இருந்து கொண்டு மொத்த சிங்கப்பூரையும் கண்களால் பார்த்து ரசிக்க முடியும்.
இதற்காக 114 கண்ணாடி துண்டுகளைக் கொண்டு செங்குத்தாக நிற்கும் 10 தூண்களும் பொருத்தப்பட்டு இருக்கிறது. உள்புறம் ரம்மியமான லைட்னிங் அமைப்புகளுடன் இந்தக் கட்டிடம் காட்சி அளிக்கிறது. உலகின் தொழில் நுட்பத்துறையில் சிறந்து விளங்கும் ஆப்பிள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கவருவதற்கு இத்தகைய ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com