மகளிர் தினத்தைச் சிறப்பித்த ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள்

  • IndiaGlitz, [Monday,March 09 2020]

 

 

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் பல நாடுகளால் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.  இந்தக் கொண்டாட்டத்தில் தொழில் நுட்ப ஊடகங்கள் தங்களது சிறப்பான பங்களிப்பை செலுத்துவது உலகில் அனைவரின் பார்வையையும் கவர்ந்த ஒரு விஷயமாகும். இந்த ஆண்டின் கொண்டாட்டத்தில் ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் உருவாக்கியுள்ள டூடுல் மற்றும் வீடியோக்கள் பலரால் பாராட்டப் பட்டன.

நேற்று, ஆப்பிள் நிறுவனம் தனது முகப்பு பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. பெண் குழந்தைகளின் கல்விக்காக குரல் கொடுத்த மாலாலா யூசுப்சாய், கால்பந்து வீராங்கனையான மேகன் ராபினோ மற்றும் #MeToo# இயக்கத்தை உருவாக்கிய தாரானா பர்க் உள்ளிட்ட செல்வாக்கு மிக்க பெண்மணிகளின் புகைப்படங்களை தொகுப்பாக வெளியிட்டு இருந்தது. உலகம் முழுவதும் உள்ள பெண்களின் சாதனைகளை தொகுப்பாதாக ஆப்பிள் நிறுவனம் இதை வடிவமைத்து இருந்தது.

இது குறித்து, ஆப்பிளின் நிர்வாக இயக்குநர் Tim Cook தனது டிவிட்டர் பக்கத்தில் “எங்களை முன்னோக்கி நகர்த்தி செல்கின்ற பெண்களை இன்று நாங்கள் மதிக்கிறோம். தலைமுறைகள் யாருடைய தோள்களில் நிற்கின்றன என்பதை தெளிவுப்படுத்தி அதை நாங்கள் கொண்டாடுகிறோம். ஒவ்வொரு பெண்ணும் பாதுகாப்பாகவும் சமமாகவும் நடத்தப் படவும் தகுதியானவர்கள்” எனத் தெரிவித்து இருந்தார்.

மேலும், Women of choice என்ற பெயரில் ஒரு Playlist ஐயும் நேற்று ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டு இருந்தது. இது Lady gaga, Taylor swift போன்ற மிகச் சிறந்த பெண் கலைஞர்களால் நிர்வகிக்கப் படுகிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.

சர்வதேச மகளிர் தின வரலாற்றை எடுத்துக் காட்டும் விதமாக நேற்று கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டு இருந்தது. இதற்காக 3 டி தொழில் நுட்பத்தில் சில புகைப்படங்களை உருவாக்கி இருந்தது. #EachforEqual என்ற பொருளில் பல பெண் சாதனையாளர்களை ஒன்றிணைத்த சிறப்பு டூடுல் உலகில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

கையால் மடித்த பேப்பர் கட்டிங்கில் இருந்து 35 பெண்மணிகள், மூன்று அடுக்குகளில் வந்து உலகம் முழுவதும் ஆக்கிரமித்து, தங்களது வலிமையை காட்டுவது போன்று  டூடுல் உருவாக்கப் பட்டு இருந்தது. “இன்றைய பெண்கள் கடந்த தலைமுறைகளின் தியாகங்களைச் செய்தவர்களின் தோள்களில் நிற்பதால், அவர்களும் இயக்கத்தின் மரபுகளை முன்னோக்கி கொண்டு செல்கின்றனர்” என்று டூடுல் குறித்து கூகுள் வலைபதிவு ஒன்றையும் வெளியிட்டு இருந்தது.

இந்த சிறப்பு டூடுலை பெண் கலைஞர்களே உருவாக்கி இருந்தனர் என்பதும் சிறப்புக் குரியது. பெண்கள் ஒன்றிணைந்து இயக்கம் உருவாக்கும் போது அவர்களின் படிப்படியான வளர்ச்சியை காட்டுவது போல இந்த டூடுலை அமைத்ததாக கலைஞர்கள் விளக்கம் அளித்தனர்.

1908 ஆம் ஆண்டு வாக்கில் அமெரிக்காவில் உழைக்கும் பெண்கள் தங்களுக்கு எதிரான அடக்குமுறை, சம ஊதியம், வேலை நேரம் குறைப்பு, பாலியல் சீண்டல்களுக்கு எதிரான குரல் எனத் தொடர்ந்த போராட்டங்களினால்  இன்று உலகம் முழுவதும் உலகம் மகளிர் தினம் கொண்டாடப் படுகிறது. இந்தக் கொண்டாட்டத்தில் பல தொழில் நிறுவனங்கள் பெண்களின் சிறப்பினை உயர்த்திக் காட்டுவது ஒரு வரவேற்கத் தக்க விஷயமாகப் பார்க்கப் படுகிறது.

 

 

 

 

 

More News

கேரளாவில் 3 வயது குழந்தைக்கு கொரோனா வைரஸ்..!

விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனைக்கு ஒத்துழைக்காமல் இருந்ததால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சீனாவிலிருந்து கொரோனா பாதிக்கப்பட்டு வந்த 3 பேர் குணப்படுத்தப்பட்டு வீடு திரும்பியுள்ளனர்.

பிரபல தயாரிப்பாளரை வஞ்சப்புகழ்ச்சி செய்த இயக்குனர் நவீன்!

தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர் ஜே சதீஷ்குமார். ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தின் சார்பில் இவர் சுமார் 20 திரைப்படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

மலேசியாவில் இருந்து கோவை வந்த நபருக்கு கொரோனா? அதிர்ச்சி தகவல்

சீனாவின் வூகான் என்ற பகுதியில் இருந்து ஆரம்பித்த கொரானா வைரஸ் படிப்படியாக சீனா முழுவதும் பரவி, சுமார் 2 ஆயிரம் உயிர்களை பலி வாங்கி விட்டது.

அஜித் தம்பியாக நடிக்கும் தமிழ் நடிகரின் மகன்

அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது

வெளிநாட்டில் அடுத்தகட்ட படப்பிடிப்பு: 'வலிமை' குறித்த புதிய அப்டேட்

அஜித் நடித்துவரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் மாறி மாறி நடைபெற்று வருவது தெரிந்ததே. சமீபத்தில் சென்னையில் மோட்டார் ரேஸ் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட்டது