விஷாலுக்கு வில்லனாகும் விஜய் ரசிகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
விஷால், கீர்த்திசுரேஷ் நடிப்பில் இயக்குனர் லிங்குசாமி இயக்கி வரும் 'சண்டக்கோழி 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் ஒருவர் தற்போது இணைந்துள்ளார்.
மலையாளத்தில் கடந்த ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படமான 'அங்காமாலே டயரீஸ்' என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த அப்பானி சரத், தற்போது சண்டக்கோழி 2' படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மலையாளத்தில் வெளிவந்த 'போக்கிரி சைமன்' என்ற விஜய் ரசிகர்களின் படத்திலும் இவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
விஷாலின் 'சண்டக்கோழி 2' படம் மட்டுமின்றி மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய்சேதுபதி நடித்து வரும் 'செக்க சிவந்த வானம்' படத்திலும் அப்பானி சரத் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout