அப்பல்லோ ரகசியம் வெளியானால் இந்தியாவில் பிரளயமே ஏற்படும். ஹேக்கர்ஸ் அதிரடி மிரட்டல் .
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையின் கம்ப்யூட்டர்கள் ஹேக் செய்யப்பட்டு ஆயிரக்கணக்கான தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும், இந்த ரகசியங்களை வெளியிட்டால் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பிரளயம் ஏற்படும் என்றும் ஹேக்கர்கள் மிரட்டியுள்ளனர்.
லீஜியன் என்ற ஹேக்கர்கள் டீம் சமீபத்தில் ராகுல்காந்தி, விஜய் மல்லையா உள்பட பல டுவிட்டர்களை ஹேக் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஹேக்கர்கள் டீம் தற்போது அப்பல்லோ சர்வரை ஹேக் செய்துள்ளதாகவும் இதில் கிடைத்துள்ள தகவல்களை வெளியிட்டால் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் பிரளயம் ஏற்பட்டு அசாதாரண நிலை ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
மேலும் அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற பல விவிஐபிக்களின் விபரங்கள் திருடப்பட்டுள்ளதாகவும் இந்தியா முழுவதும் சுமார் 1.2 ஜிகாபைட் அளவுகளில் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும் லீஜியன் ஹேக்கிங் குழு அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com