அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டபோதே ஆபத்தான நிலையில்தான் இருந்தார் ஜெ. பிரதாப் ரெட்டி
- IndiaGlitz, [Saturday,December 16 2017]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணம் அடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டதால் அதுகுறித்து விசாரணை செய்ய நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டு அந்த கமிஷனும் விசாரணையை மேற்கொண்டு வருகிறது.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் சாதாரண காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டதாகவும், ஓரிரு நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார் என்றும் அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. பின்னர் படிப்படியாக ஜெயலலிதாவுக்கு பல்வேறு பிரச்சனைகள் இருந்ததாக கூறப்பட்டு லண்டன் டாக்டர், எய்ம்ஸ் டாக்டர் ஆகியோர்களும் சிகிச்சை அளித்தனர். இறுதியில் சிகிச்சையின் பலனின்றி ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அப்பல்லோ மருத்துவமனையின் பிரதாப் ரெட்டி திடீர் பல்டியாக ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டபோதே ஆபத்தான நிலையில்தான் இருந்ததாக கூறியுள்ளார். சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாகவே சாதாரண காய்ச்சல் என்று அறிவிக்கப்பட்டதாகவும், இதுகுறித்த விசாரணை நடந்து கொண்டிருப்பதால் இதற்கு மேல் எதுவும் கூற முடியாது என்றும் பிரதாப் ரெட்டி தெரிவித்தார்
மேலும் அப்பல்லோ மருத்துவர்கள் சிலருக்கு விசாரணை கமிஷனுக்கு சம்மன் வந்துள்ளதாகவும், இதுவரை தனக்கு எந்தவித சம்மனும் வரவில்லை என்றும் அவர் கூறினார்