அப்பல்லோ பிரதாப் ரெட்டி மருத்துவமனையில் அனுமதி

  • IndiaGlitz, [Saturday,March 24 2018]

அப்பல்லோ மருத்துவமனை குழுவின் தலைவர் பிரதாப் ரெட்டிக்கு திடீரென நேற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவருடைய அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு திடீரென பிரதாப் ரெட்டிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கம் அடைந்ததாகவும், இதனையடுத்து  அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

பிரதாப்ரெட்டிக்கு மருத்துவர்கள் ஆஞ்சியோகிராம் எடுத்து அதன் பின்னர் தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சிறப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டதாகவும் தொடர்ந்து அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றனர்.