ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்: மருத்துவர்கள் தெரிவித்த 2 முக்கிய அறிவுரைகள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அவருக்கு ஏற்பட்ட ரத்த அழுத்த மாறுபாடு பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்றுமுன் அப்பல்லோ மருத்துவமனை ரஜினி உடல்நிலை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 25ஆம் தேதி ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு தேவையான பரிசோதனைகள் செய்யப்பட்டன. தற்போது அவரது ரத்த அழுத்தம் சீராக உள்ளது. மேலும் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்
ஆனால் அதே நேரத்தில் அவருக்கு சில அறிவுறுத்தல்கள் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு வாரம் அவர் முழுவதுமாக முழு ஓய்வு எடுக்க வேண்டும். அவரது இரத்த அழுத்தம் அவ்வப்போது பரிசோதனை செய்யப்பட வேண்டும். மேலும் கோவிட் தொற்று ஏற்படும் எந்த செயலிலும் அவர் ஈடுபடக்கூடாது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
வரும் 31ஆம் தேதி ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மருத்துவர்களின் இந்த ஆலோசனைக்கு பின் அவர் திட்டமிட்டபடி அரசியல் அறிவிப்பை வெளியிடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments