ரஜினிகாந்த் உடல் நிலை எப்படி இருக்கிறது? அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!

  • IndiaGlitz, [Tuesday,October 01 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நடிகர் ரஜினிகாந்த் செப்டம்பர் 30-ஆம் தேதி கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்துக்குச் செல்லும் பிரதான ரத்த நாளத்தில் வீக்கம் காணப்பட்டதைத் தொடர்ந்து, அறுவை சிகிச்சை இல்லாமல் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

மூத்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சாய் சதீஷ், வீக்கத்தை முற்றிலுமாக நீக்கும் வகையில் ஸ்டண்ட் வைத்து சிகிச்சை அளித்தார். இந்த சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது, எனவே ரஜினி ரசிகர்களுக்கும் நல விரும்பிகளுக்கும் அவரது சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

தற்போது ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது, மேலும் அவர் குணமடைந்து வருகிறார். இன்னும் இரண்டு நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, ரஜினி ரசிகர்களுக்கு நிம்மதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

'தளபதி 69' படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் அறிவிப்பு.. முதல் அறிவிப்பே மாஸ்..!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 69' திரைப்படத்தை எச் வினோத் இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்து அறிவிப்பு இன்று முதல் வெளியாக இருப்பதாக

3D டெக்னாலஜியில் வெளியாகிறது 'கங்குவா'.. உறுதி செய்த படக்குழுவின் பிரபலம்..!

சூர்யா நடித்த  'கங்குவா' திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி வெளியிடப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருமண அறிவிப்பா? திரைப்பட அறிவிப்பா? வனிதா விஜயகுமார் பதிவால் ரசிகர்கள் குழப்பம்..!

நடிகை வனிதா விஜயகுமார், டான்ஸ் மாஸ்டர் ராபர்டுடன் காதலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, "அக்டோபர் 5ஆம் தேதி முக்கிய அறிவிப்புக்காக காத்திருங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

ஹிந்தியில் ஏன் பேச வேண்டும்? நான் தென்னிந்தியர்.. நடிகை மீனா பதிலடி..!

சமீபத்தில் நடந்த திரைப்பட விழாவில் நடிகை மீனா கலந்து கொண்ட நிலையில், நிருபர்கள் அவரிடம் ஹிந்தியில் பேசுமாறு கேட்டபோது, "நான் ஏன் ஹிந்தியில் பேச வேண்டும்?

மகாளய அமாவாசை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் திதி கொடுக்கும் முறை

பித்ரு தோஷ நிவர்த்திக்கு சிறந்த நாள்! மகாளய அமாவாசை: முன்னோர்களை வழிபடும் சிறப்பு நாள் | ஆன்மீகக்ளிட்ஸ்