ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது எப்போது? புதிய குழப்பம்

  • IndiaGlitz, [Sunday,July 08 2018]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி மாலை 4.20 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனையின் அறிக்கை ஒன்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்து வரும் ஆறுமுகச்சாமி தலைமையிலான ஆணையத்தின் முன் சமீபத்தில் அப்பல்லோ மருத்துவமனையின் ஈசிஜி டெக்னீஷியன் நளினி ஆஜரானார்.

அவர் ஆணையத்தின் முன் இதுகுறித்து கூறியபோது, 'ஜெயலலிதாவுக்கு மாலை 3.50 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் தான் அழைக்கப்பட்டதாகவும், அதன் பின்னரே தான் அவருக்கு ஈசிஜி எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தான் ஜெயலலிதாவுக்கு ஈசிஜி பரிசோதனை செய்தபோது அவர் இதயம் செயல் இழந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

அப்பல்லோ மருத்துவமனையின் அறிக்கையின்படி ஜெயலலிதாவுக்கு 4.20 மணிக்கும், நளினி வாக்குமூலத்தின்படி மாலை 3.50 மணிக்கும் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக இருவேறு கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் உண்மையில் ஜெயலலிதாவுக்கு எப்போது மாரடைப்பு ஏற்பட்டது என்பதில் தற்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது.

More News

கருப்பு-சிகப்பு ரோஜாக்களுக்கு கமல் கொடுத்த விளக்கம்

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவருக்கும் ஒரு கருப்பு ரோஜாவும், ஒரு சிகப்பு ரோஜாவும் வழங்கப்பட்டது. தங்களுக்கு பிடித்தவர்களுக்கு சிகப்பு ரோஜாவையும் பிடிக்காதவர்களுக்கு கருப்பு ரோஜா

ரஜினியின் அடுத்த விசிட் மதுரையா?

சமீபத்தில் தூத்துக்குடி சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், துப்பாக்கி சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் ஆறுதல் கூறினார். இந்த நிலையில் அடுத்ததாக அவர் மதுரை செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

'சர்கார்' ஃபர்ஸ்ட்லுக் விவகாரம்: விஜய்க்கு ஆதரவு அளித்த இயக்குனர்

கோலிவுட் திரையுலகில் உருவாகும் 90% படங்களில் புகைபிடிக்கும் மற்றும் மது அருந்தும் காட்சிகள் உள்ளன. ஆனால் ஒருசில படங்களுக்கு மட்டுமே அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

விஜய் படத்தை இயக்க ஆசைப்படும் 'சந்திரமெளலி' இயக்குனர்

'மிஸ்டர் சந்திரமெளலி' திரைப்படம் திரையரங்குகளில் ஓடிவரும் நிலையில் இந்த படத்தின் இயக்குனர் திரு, தளபதி விஜய் படத்தை இயக்கும் தனது ஆசையை பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.

திருமணமான சில நிமிடங்களில் உயிரிழந்த மணப்பெண்: அதிர்ச்சியில் மணமகன்

ஆயிரம் காலத்து பயிர் என்று கூறப்படும் திருமணம் ஒருசில நிமிடங்களில் முடிவுக்கு வந்த சோக நிகழ்ச்சி ஒன்று தெலுங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது.