ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது எப்போது? புதிய குழப்பம்
- IndiaGlitz, [Sunday,July 08 2018]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி மாலை 4.20 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனையின் அறிக்கை ஒன்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்து வரும் ஆறுமுகச்சாமி தலைமையிலான ஆணையத்தின் முன் சமீபத்தில் அப்பல்லோ மருத்துவமனையின் ஈசிஜி டெக்னீஷியன் நளினி ஆஜரானார்.
அவர் ஆணையத்தின் முன் இதுகுறித்து கூறியபோது, 'ஜெயலலிதாவுக்கு மாலை 3.50 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் தான் அழைக்கப்பட்டதாகவும், அதன் பின்னரே தான் அவருக்கு ஈசிஜி எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தான் ஜெயலலிதாவுக்கு ஈசிஜி பரிசோதனை செய்தபோது அவர் இதயம் செயல் இழந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
அப்பல்லோ மருத்துவமனையின் அறிக்கையின்படி ஜெயலலிதாவுக்கு 4.20 மணிக்கும், நளினி வாக்குமூலத்தின்படி மாலை 3.50 மணிக்கும் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக இருவேறு கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் உண்மையில் ஜெயலலிதாவுக்கு எப்போது மாரடைப்பு ஏற்பட்டது என்பதில் தற்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது.