தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை தொடர்கிறது. அப்பல்லோ அறிக்கை
- IndiaGlitz, [Monday,December 05 2016]
தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானதாக செய்திகள் வெளியானது தவறு என்றும் அவருக்கு சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது என்றும் அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை ஒன்றை அளித்துள்ளது.
அந்த அறிக்கையில், 'முதல்வர் ஜெயலலிதாவின் உயிரை காப்பாற்ற தொடர்ந்து அப்பல்லோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.
ஒருசில தொலைக்காட்சிகள் முதல்வர் உடல்நிலை குறித்து தவறான தகவல்களை வெளியிட்டுள்ளன. ஊடகங்கள் அனைத்தும் தங்கள் செய்தியை மாற்றி கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.