வேற மாதிரி சம்பவம் வந்துகிட்டே இருக்கு: விஜய் ரசிகர்களை குஷிப்படுத்திய அபர்ணா தாஸ்
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தின் இரண்டாம் சிங்கிள் பாடல் இன்று ரிலீசாக இருக்கும் நிலையில் வேற மாதிரி சம்பவம் வந்து கொண்டே இருக்கிறது என நடிகை அபர்ணா தாஸ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.
விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக்குத்து பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இரண்டாவது சிங்கிள் ’ஜாலியோ ஜிம்கானா ’ என்ற பாடல் வெளியாக உள்ளது. அனிருத் இசையமைப்பில் விஜய் பாடிய இந்த பாடல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் இந்த பாடல் குறித்த புரோமோ விடியோ இன்று காலை முதல் வைரலாகி வருகிறது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் ’பீஸ்ட்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள அபர்ணா தாஸ், இன்று வெளியாகவிருக்கும் சிங்கிள் பாடலில் பல ஆச்சரியங்கள் காத்திருப்பதாகவும், வேற மாதிரி சம்பவம் வந்து கொண்டே இருப்பதாகவும் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து தளபதி விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Lot of Fun and surprises waiting for all Thalapathy Fans ❤️?? vera maari sambavam On the way ! @actorvijay @Nelsondilpkumar @hegdepooja?? #JollyOGymkhana ?????????? pic.twitter.com/09Px1gnuqc
— Aparna Das (@AparnaDasOff_) March 19, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com