14 வருடங்களுக்கு முன் வெளியான சூர்யா பட பாடலை பாடிய 'சூரரைப்போற்று' நாயகி!

  • IndiaGlitz, [Tuesday,September 08 2020]

14 வருடங்களுக்கு முன் வெளியான சூர்யா படத்தின் பாடலை சூர்யாவின் ’சூரரைப்போற்று’ படத்தின் நாயகி பாடியுள்ள வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

சூர்யா, ஜோதிகா நடிப்பில் கிருஷ்ணா இயக்கத்தில் ஞானவேல்ராஜா தயாரிப்பில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்த திரைப்படம் ’சில்லுனு ஒரு காதல்’. கடந்த 2006ம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி இந்தப் படம் வெளியானது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது தான் சூர்யா-ஜோதிகா காதல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ’சில்லுனு ஒரு காதல்’ திரைப்படத்தின் 14 வது ஆண்டு விழாவை சூர்யாவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இது குறித்து இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்களும் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் குறிப்பாக ’முன்பே வா என் அன்பே வா’ என்ற பாடல் மிகப் பெரிய ஹிட்டானது என்பது தெரிந்ததே. ஸ்ரேயா கோஷல் மற்றும் நரேஷ் ஐயர் பாடிய இந்த பாடலை தற்போது சூர்யாவின் ’சூரரைப்போற்று’ படத்தின் நாயகியாக நடித்துள்ள அபர்ணா பாலமுரளி மேடை ஒன்றில் பாடியுள்ளார். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.