பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு: பாக்யராஜூக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்
Send us your feedback to audioarticles@vaarta.com
பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக இயக்குனர் கே.பாக்யராஜ் மீது ஆந்திர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
நேற்று நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் கே.பாக்யராஜ் பேசியபோது, ‘’ஆண்கள் சின்னவீடு வைத்துக் கொண்டாலும் பெரிய வீட்டை எந்தவித தொந்தரவும் செய்ய மாட்டார்கள் என்றும், ஆனால் பெண்கள் குடும்பத்தை, கணவனை விட்டுவிட்டு வேறு ஒருவருடன் கள்ளக்காதல் வைத்தால் கணவனையோ அல்லது குழந்தைகளை கொல்லும் அளவுக்கு துணிகிறார்கள் என்றும் இதனால் பெண்கள் முறை தவறும் போது குடும்பத்தில் விபரீதம் நடப்பதாகவும் அவர் பேசினார்
மேலும் ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது என்பது காமெடியாக சொல்லப்பட்ட ஒரு விஷயம் அல்ல என்றும் உண்மை அதுதான் என்றும் கூறிய கே.பாக்யராஜ், பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகள் ஆண்களாக இருந்தாலும், அந்த குற்றங்கள் செய்ய பெண்களும் ஒரு காரணமாக இருந்திருக்கின்றார்கள் என்றும் கூறினார்.
கே.பாக்யராஜின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர மாநில மகளிர் அமைப்பு கொடுத்த புகாரின் அடிப்படையில் கே.பாக்யராஜ் மீது ஆந்திர மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments