நந்தி சிலைக்குள் ரூ.60 கோடி மதிப்பிலான வைரம்? அசட்டு நம்பிக்கையால் நடந்த சுவாரசியம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
புதையல், மாந்திரீகம் போன்ற அசட்டு நம்பிக்கையைக் கொண்ட ஒரு கும்பல் சிவன் கோவிலில் வைக்கப்பட்டு உள்ள நந்தி சிலையில் ரூ.60 கோடி மதிப்பிலான வைரம் இருப்பதாக நம்பி இருக்கிறது. இதையடுத்து அந்த நந்தி சிலையை யாருக்கும் தெரியாமல் கடத்தி அதை சுக்கு நூறாக உடைத்தெறிந்த சம்பவம் தெலுங்கானா மாநிலம் ஹைத்ராபாத் பகுதியில் அரங்கேறியுள்ளது.
ஹைத்ராபாத் நகரைச் சேர்ந்த பூசாரி பாபா. இவர் மாந்தீரிகத்தில் நம்பிக்கை கொண்டவர். மேலும் இவர் காளகஸ்தி பகுதிக்கு அருகே உள்ள தேவலம் பேட்டை பகுதியில் அமைந்து இருக்கும் சிவன் கோவில் நந்தி சிலையில் ரூ.60 கோடி மதிப்பிலான வைரம் இருக்கிறது என நம்பியிருக்கிறார். இதைத் தனது உதவியாளர் ஹரியிடமும் கூறியிருக்கிறார். எனவே அந்த நந்தி சிலையை யாருக்கும் தெரியாமல் திருடி அதில் உள்ள வைரத்தை எடுப்பதற்கு இருவரும் திட்டம் தீட்டியுள்ளனர்.
மேலும் இந்த திருட்டுச் செயலுக்கு துணையாக வெங்கடேஷ், வெங்கடகிரி, வெங்கடாஜலபதி, ஸ்ரீதர், ரங்க பாபு போன்றோரை அழைத்துக் கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஆட்டோவில் சென்று நந்தி சிலையை திருடி இருக்கின்றனர். மேலும் அந்த சிலையை ஒரு விவசாய நிலத்தில் பதுக்கியும் வைத்துள்ளனர்.
இப்படி பதுக்கி வைக்கப்பட்ட சிலையை அந்த கும்பலில் இருந்த ரங்கபாபு தனது கூட்டாளிகளுக்கே தெரியாமல் அங்கிருந்து எடுத்துச் சென்றுள்ளார். மேலும் அந்த சிலையை சுக்கு நூறாக உடைத்து அதில் வைரம் இருக்கிறதா எனத் தேடியுள்ளார். ஆனால் சிலையில் வைரம், தங்கம் எதுவும் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரங்கபாபு சிலையை அருகில் உள்ள ஆற்றில் வீசியுள்ளார்.
இந்நிலையில் தேவலம்பேட்டை கோவிலில் நந்தி சிலையை இல்லாமல் இருப்பதை அறிந்த அந்த கோவில் பூசாரி கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இதனால் போலீஸ் சிலை குறித்து தேடுதல் வேட்டை நடத்தி இருக்கிறது. இதையடுத்து பாபு என்ற பூசாரி நந்தி சிலையை திருடி விவசாய நிலத்தில் பதுக்கி வைத்தது குறித்தும் அந்த கும்பலிடம் இருந்து ரங்கபாபு தனியாக எடுத்து வந்து உடைத்தது குறித்தும் போலீஸார் கண்டுபிடித்து உள்ளனர். இதையடுத்து இந்தத் திருட்டுச் செயலில் ஈடுபட்ட 10 பேரையும் தெலுங்கானா காவல் துறை கைது செய்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout